Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாலால் சலாம் முதல் நாள் வசூல்-ஐஸ்வர்யா, ரஜினிகாந்தை ஜெயித்த தனுஷ்.. ரசிகர்கள் விமர்சனம்...!

லால் சலாம் முதல் நாள் வசூல்-ஐஸ்வர்யா, ரஜினிகாந்தை ஜெயித்த தனுஷ்.. ரசிகர்கள் விமர்சனம்…!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் பல தடைகளையும், சர்ச்சைகளையும் ,விமர்சனங்களையும் தாண்டி நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக விஷ்ணு விஷாலும் ,விக்ராந்த்தும் நடித்திருந்தார்கள். ஆனால் சிறப்பு கதாபாத்திரம் என்று கூறி சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மணி நேர காட்சியை படத்தில் வைத்திருக்கிறார்கள் இதனால் இது சூப்பர் ஸ்டார் என் திரைப்படம் என்று தான் கூறப்படுகிறது.

திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று டைட்டில் கார்டு போட்டு தான் திரைப்படத்தையே தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.

- Advertisement -

அந்த அடிப்படையில் இந்த திரைப்படத்தை  தியேட்டர் உரிமையாளர்களும், வினோஹிஸ்தர்களும் நம்பியிருந்தார்கள். ஆனால் லால் சலாம் திரைப்படம் 4.3 கோடியே முதல் நாள் வசூலை பெற்று சரிந்து விட்டது. இது திரைப்படத்தை நம்பியவர்களை மிக மோசமாக ஏமாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒருவேளை முதலில் முடிவு செய்தது போல் பொங்கலுக்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் நிச்சயமாக இந்த அளவிற்கு கூட வசூலை பெற்றெடுக்க முடியாது. ஏனென்றால், அப்பொழுது வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் ஒன்பது கோடி வசூலை பெற்றது.

அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த அயலாம் திரைப்படம் 7 கோடி வசூலை பெற்றது. இவற்றோடு ஒப்பிடுகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் இந்த அளவிற்கு அடி வாங்கியது அதிர்ச்சியை  தருகிறது.

இதற்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மூன்று, கோச்சடையான், வை ராஜா வை போன்ற திரைப்படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி அடையவில்லை. அந்த வரிசையில் இந்த திரைப்படமும் இணைந்து விட்டதே  என்று கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழும்பி இருக்கிறது.

இதை சில ரசிகர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் திருமண வாழ்வு முறிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் முயற்சி என்றும் அதில் தனுஷே  தற்பொழுது வென்றிருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களை வெற்றி பெற செய்வதற்கு அவருடைய ரசிகர்களை போதுமானவர்களாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. இனிவரும் நாட்களிலாவது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தால் இன்நிலை மாற வாய்ப்பு இருக்கிறது.

Most Popular