சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.
ஏன் இந்த திரைப்படத்தை இயக்கினோம் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்தே சிந்திக்கும் அளவிற்கு போதும் போதும் என்று பிரச்சனைகள் இந்த திரைப்படத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது.
சுட்ட கதை என்ற சர்ச்சையில் இருந்து ரஜினிகாந்த் சங்கி இல்லை என்று பல பிரச்சனைகளை சந்தித்து முட்டி மோதி முனங்கி கொண்டிருக்கிறது லால் சலாம் திரைப்படம்.
இதுவெல்லாம் பத்தாது என்று புதிதாக ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறது லால் சலாம் திரைப்படம். லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பது பலரும் அறிந்த விஷயம் தான். அதில் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டை முன்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை மத கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய கதைக்களமாக பார்க்கத் தொடங்கி விட்டார்கள் . அதிலும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறிய செய்தியால் அது அதிகமாகி இருக்கிறது.
இதுபோன்று மதவாதத்தையும் மதக் கலவரத்தையும் ஏற்படுத்துவது போன்று இருக்கும் திரைப்படங்களை அரபு நாடுகளில் வெளியிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. குவைத் போன்ற நாடுகளில் இது போன்ற திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது .
இதற்கு முன்பு நிறைய திரைப்படங்கள் இது போல் தடை செய்யப்பட்டு இருக்கிறது .இந்த வரிசையில் தற்போது லால் சலாம் திரைப்படமும் இடம்பெற்றிருக்கிறது.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் லால் சலாம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிற நாடுகளிலும் இதுபோன்று செய்துவிடலாம் என்று ஆலோசனையும் நடந்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.
அப்படியே போனால் லால் சலாம் திரைப்படத்தின் நிலை என்ன என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.