Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாலால் சலாம் படபிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்.. ரஜினி கேரக்டர் என்ன?

லால் சலாம் படபிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்.. ரஜினி கேரக்டர் என்ன?

- Advertisement -

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் .
மேலும் தெலுங்கு சினிமாவின் நடிகையும் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜீவிதா ராஜசேகர் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரியாக கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

1990க்கு முன்பு தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அது எதுவும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்பதால் இவரை பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு இவர் நடிப்பதையும் விட்டுவிட்டார். சில படங்களை தெலுங்கில் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சகோதரியாக திரைக்கு வர இருக்கிறார்.இந்தத் திரைப்படத்திற்கு மேருகூட்டும் வகையில் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தினுடைய பாடல்கள் வெற்றியின் உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த திரைப்படத்தை பொன்னியின் செல்வன் கைதி போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா வை சேர்ந்த சுபாஷ்கரன் தயாரிக்க இருக்கிறார்.திரைப்படத்தின் உடைய பெயரும் அதனுடைய போஸ்டரையும் பார்ப்பதற்கு இது ஒரு போராளிகளைப் பற்றிய கதைக்களம் என்றும் மேலும் அந்த போஸ்டில் கிரிக்கெட் ஹெல்மெட் எரிவதை பார்ப்பதற்கு இது ஒரு கிரிக்கெட் சம்பந்தமான திரைப்படமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

ரஜினி குசேலன் படத்திற்கு பிறகு சிறப்பு தோற்றத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 7ஆம் தேதி தொடங்குகிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். அது முடிந்தவுடன் லால் சலாம் படத்தில் வந்து இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular