Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாஜெட் வேகத்தில் செல்லும் லால் சலாம்.. சூப்பர் ஸ்டாரின் புதுச்சேரி திட்டம் முடிவு

ஜெட் வேகத்தில் செல்லும் லால் சலாம்.. சூப்பர் ஸ்டாரின் புதுச்சேரி திட்டம் முடிவு

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்கள் இது கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் ஆகும்.

- Advertisement -

சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தை நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லார்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடித்தால் அவர்தான் முக்கிய கதாபாத்திரமாக இருப்பார். இந்த திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் என்றாலும் இவருடைய கதாபாத்திரமானது சிறிது நேரமே இருப்பதாகவும் சிறப்பு தோற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

துணை இயக்குனரால் சர்ச்சை

இயக்குனர் பாலு மகேந்திரனின் துணை இயக்குனர் மோகன். இவர் சில நாட்களுக்கு முன்பு லால் சலாம் திரைப்படத்தின் மீது ஒரு புகாரை முன் வைத்தார். இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் இந்த லால் சலாம் திரைப்படத்தின் கதை என்னுடையது.

- Advertisement -

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லைக்கா நிறுவனத்திற்கு நான் அனுப்பிய கதை இது முற்றிலும் கால்பந்தை மையமாக வைத்து நான் எழுதி இருந்தேன். அந்த கதையை திருடி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதை முற்றிலும் ஆக கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையாக மாற்றி தற்பொழுது இயக்கி வருகிறார் என்று கூறியிருந்தார்.

இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் இப்படி ஒரு காரியத்தை செய்தாரா என்று ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தார்கள்

இதை அறிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் துணை இயக்குனர் மோகனின் கதையைப் படித்து விட்டு என்னுடைய கதைக்கும் அவருடைய கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு:

ஒரு வழியாக எல்லா தடைகளையும் மீறி இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாரி சலாம் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பை நடத்தி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாண்டிச்சேரி லால்ஸ் எல்லாம் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருடைய பாகம் நேற்று இரவோடு நிறைவு பெற்றது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். மேலும் ஞானவேல் இயக்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தற்பொழுது லியோ திரைப்படத்தின் பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் நடிப்பதாகவும் அதுவே அவருக்கு கடைசி திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனுடன் தன்னுடைய சினிமா வாழ்வை முடித்துக் கொள்வார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும் கூறப்படுகிறது.

Most Popular