Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாசந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கேரக்டரில் இவங்களா ? முக்கிய அப்டேட் வெளியீடு

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கேரக்டரில் இவங்களா ? முக்கிய அப்டேட் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய பங்கு சந்திரமுகி திரைப்படத்திற்கு உள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய ரஜினிகாந்த் , பாபா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு இது சிறிய சரிவு தான் மீண்டும் ஹிட் கொடுப்பேன் என்று கூறினார். ” நான் யானை இல்ல, குதிரை யானை விழுந்தால் எழுந்திருக்க லேட்டாகும்.. நான் குதிரை டக்குனு எந்திரிச்சிவிடுவேன் என்று பேசினார். ரஜினியின் அதீத நம்பிக்கைக்கு சந்திரமுகி திரைப்பட கதையே காரணம் என பின்னர் தெரிய வந்தது. சந்திரமுகி திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்தது .

- Advertisement -

இந்தப் படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் ஜோதிகாவுக்கும் , வடிவேலுக்கும் அவர்களது வாழ்க்கையில் முக்கிய திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதையை பி வாசு ரஜினிக்காக ஏற்கனவே செய்து வைத்திருந்தார். ஆனால் ரஜினியிடம் கால் சீட் இல்லாததால் அந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பேய் படங்களில் நடித்து பிரபலமான ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார் . இதனை அடுத்து அந்தப் படத்தில் வேலைகள் மீண்டும் தொடங்கின. லைக்கா இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொள்ள , பி. வாசு திரைக்கதையை ராகவ லார்ஸ்க்காக கொஞ்சம் மாற்றி அமைத்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது .சந்திரமுகி படத்தில் ரஜினியை விட ஜோதிகாவுக்கு தான் அதிக பவர்ஃபுல் கதாபாத்திரமாக இருந்தது.

இந்த இரண்டாம் பாகத்தில் யார் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்த நிலையில், லட்சுமிமேனன் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளார். மேலும் சந்திரமுகி படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கிய வடிவேலுவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரிபிள் ஆர் படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றிய கீராவாணி சந்திரமுகி 2 படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் சந்திரமுகி படம் ஹிந்தியில் பூல் பாலையா என்று 2007 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய்குமார் நடித்து ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யான், கியாரா அத்வானி, தபு ஆகியோர் நடித்து வெளியாகி 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இதனால் சந்திரமுகி 2 படமும் அதே போல் சாதனை படைக்கும் என்று திரைப்பட வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

- Advertisement -

Most Popular