சினிமா

தளபதி 68 ? இயக்குனர் அட்லீக்கு 400 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பரிசு கொடுத்துள்ள விஜய் !

Vijay Atlee

இயக்குனர் அட்லீ நடப்பு நம்பிக்கை வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர். ராஜா ராணி படத்தில் துவங்கி அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று தரமான படங்களை தந்தார். இந்த உழைப்பு அவரை பாலிவுட் நாயகன் ஷாருக் கானை இயக்கும் உயரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அட்லீ ஷாருக் கான் – நயன்தாரா காம்போவில் ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

இரு தினங்களுக்கு முன்னர் அட்லீ – பிரியா ஜோடி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக கூறினர். இந்நற்செய்தியை அட்லீ மிக பிரம்மாண்டமான வளைகாப்பு நிகழ்ச்சியை அமைத்து கொண்டாடினார். இதில் அவருக்கு மிகவும் நெருங்கிய தளபதி விஜய்யும் பங்கேற்றார்.

Advertisement

தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு ஓர் புகைப்படத்தை அவர்களுக்கு பரிசாக தந்தார். அதோடு நிறுத்தாமல் தனது அடுத்த படத்தை இயக்கும் மிகப் பெரிய வாய்ப்பையும் அளித்துவிட்டு வந்துள்ளாராம் தளபதி விஜய். தளபதி 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதற்கு அடுத்த படத்தில் நான்காவது முறையாக அட்லீயுடன் இணைகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 400 கோடி செலவில் இப்படம் தயாராக உள்ளது. மேற்கூறிய இரு பரிசுகளை விட மிகப் பெரிய பரிசு இது தான். அதாவது இப்படத்தில் இயக்குனர் அட்லீயின் சம்பளம் ரூ.50 கோடி ஆம். தற்போது அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் இவர் தான். சுருக்கமாக சொல்லப் போனால் இயக்குனர் ஷங்கரின் உயரத்தை எட்டியுள்ளார் அவரது சிஷ்யன்.

Advertisement

இதற்கு முன் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படம் பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. இதை விஜய் இப்படம் மூலம் ஈடுகட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் விஜய்யை வைத்து அட்லீ கடைசியாக இயக்கிய பிகில் பெரிதாக வரவேற்கப்படவில்லை. கமர்ஷியல் களத்ததில் அற்புதம் செய்யும் அட்லீ அதற்கும் சேர்த்து இம்முறை சிறப்பிக்கவுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top