Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித்குமார் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் !

அஜித்குமார் 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது ? வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் !

சென்ற வாரம் சமூக வலைதளம் முழுவதும் நடிகர் அஜித்குமார் தான் டிரென்டிங். ரைபில் ஷூட்டிங் போட்டியில் கலந்து கொள்ள திருச்சி வந்திருந்தார். அஜித். அவரைக் காண லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரள அவ்விடமே திருவிழா போல மாறியது. மாடியில் நின்று கையசைத்தும் பறக்கும் முத்தம் அளித்தும் தன் ரசிகர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டினார். பெரிதாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அஜித்குமார் சுமார் 12 வருடங்களுக்குப் பின் இது போன்ற பிரம்மாண்ட சந்திப்பில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆகஸ்ட் 3ஆம் தேதியுடன் சினிமாவில் அஜித்குமார் தன் 30வது ஆண்டை நிறைவு செய்கிறார். இதனால் இந்த நாளில் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் எதாவது வருமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். அஜித்குமார் – ஹெச்.வினோத் மூன்றாவது முறை இணைந்து உருவாக்கும் படத்தின் வேலைகள் தீவிரமாக நடக்கிறது. மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படப்பிடிப்பு கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக்கை படக்குழு வெளியிடவில்லை.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இரவு வலிமை படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர். அதே போல் இந்த ஆண்டும் அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நாளை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகப் போவதில்லை. மீதமிருக்கும் காட்சிகளை படம்பிடிக்க அஜித்குமார் மற்றும் படக்குழு பணியாளர்கள் அனைவரும் புனே செல்லவிருக்கிறார்கள். ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 15 வரை இது நடைபெறவுள்ளது.

- Advertisement -

அப்போ எப்போ தான் அப்டேட் கொடுப்பார்கள் ?

தயாரிப்பாளர் போனி கபூரின் மறைந்த மனைவி ஶ்ரீதேவியின் ஆசைக்கு இணங்க தான் அஜித்குமார் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்தார். வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி ஶ்ரீதேவியின் பிறந்தநாள். பல மாதங்களாக ரசிகர்கள் கேட்கும் ஏகே 61வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். செப்டம்பர் இறுதிக்குள் ஷூட்டிங் முற்றிலுமாக முடிவடைய திரைப்படம் தீபாவளி அல்லது டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Most Popular