மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் லியோ திரைப்படம் இன்னும் சரியாக ஒரு வாரத்தில் திரைக்கு வரவிருக்கிறது. தற்போது படக்குழு புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை டிரெய்லர், போஸ்டர்கள் மற்றும் நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் ‘ ஐ எம் ஸ்கேர்ட் ’ எனும் ஓர் ஆங்கிலப் பாட்டு மட்டுமே வெளியாக வேண்டும். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனக்கு பிடித்த பாடல் என இதனைக் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதனால் இதற்கு எதிர்பார்ப்புகள் சற்று அதிகம். இந்த வார இறுதியில் வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
பல மாதங்கள் காத்திருந்த படத்தின் வெளியீடு ரீலீஸ் தேதியை நெருங்குவதால் ரசிகர்களின் கவனம் டிக்கெட்டுகள் பக்கம் திரும்பியுள்ளது. வெளிநாட்டில் போன மாதமே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுப் போய் கூடுதல் ஷோக்கள் கூட்டி அனைத்தும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் புக்கிங் துவங்கவில்லை. எப்போது என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அடுத்த வியாழக்கிழமை வெளியாவதால் வரும் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் விற்பனைகள் துவங்குவது உறுதி. பி.வி.ஆர் போன்ற மல்டிப்ளக்ஸ் சினிமா அரங்கில் புதன்கிழமை ஓப்பன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் மற்றும் ஓர் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் லியோ படத்தின் ப்ரீ பிசினஸ் 200 கோடியை நெருங்கியுள்ளது என தகவல்கள் வந்துள்ளன. அனைத்து பணத்தையும் சுலபமாக ஒரே வாரத்தில் விநியோகிஸ்தர்கள் எடுத்து விடுவர்.
தளபதியின் சினிமா வாழ்க்கையிலேயே மிகுந்த ஆக்க்ஷன் காட்சிகள் கொண்ட திரைப்படமாக இது இருக்கும் எனும் லோகேஷ் கனகராஜின் வார்த்தைகள், எப்போது படம் வரும் என்ற ஏக்கத்தை அதிகரித்துள்ளது. உலக அளவில் எப்படியும் குறைந்தது 400 – 500 கோடிகளை அள்ளும். படம் மிகவும் சிறப்பாக அமைத்தால் அதை விட அதிகமாவே எதிர்பார்க்கலாம்.