சினிமா

விசாலை ஓட்டி எடுத்த உதயநிதி..!! ரோபோ சங்கரை மேடையில் அடித்த விசால்

நடிகர் விஷால் நடித்த லத்தி திரைப்படத்தின் டீசர் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சைக்கிளில் வந்து நடிகர் விஷால் கலந்து கொண்டார்.பிறகு மேடைக்கு கான்ஸ்டபிள் உடை அணிந்து நடிகர் விஷால் வந்து பார்வையாளர்களை பார்த்து சல்யூட் அடித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஷாலை மேடையில் கிண்டல் செய்து ஓட்டினார். நடிகர் விஷால் போலீசாக நிறைய படங்களில் நடித்து விட்டார். முதலில் கமிஷனர் ஆக நடித்த பிறகு இன்ஸ்பெக்டர் ஆக நடித்து தற்போது கான்ஸ்டபிள் ஆக புரமோஷன் ஆகி இருக்கிறார் என்று சிரித்தபடியே கூறினார்.நடிகர் சங்கம் கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுங்கள். கட்டிடத்தை முடித்துவிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று விஷாலுக்கு உதயநிதி அறிவுரை கூறினார்.

Advertisement

நடிகர் விஷால் எப்போதுமே சண்டை காட்சிகள் நிறைந்த படத்தில் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின் தான் போலீஸ் அதிகாரியாக நடித்தால் கூட அது சண்டை காதல் காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன் என்று குறிப்பிட்டார். விஷாலும் தாமும் பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்று கூறினார்.அப்போது மேடைக்கு வந்த விஷால் , உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர வேண்டும் என தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கூறி வருவதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது தாமும் உதயநிதியும் பிரச்சார வாகனத்தில் அமர்ந்திருப்போம் என்றும் விஷால் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் நட்புதான் எனக்கு மிகவும் முக்கியம் என்றும், இந்த நட்பை தாங்கள் இருவரும் பாதுகாத்து வருவதாக விசால் குறிப்பிட்டார் . உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது. விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிப்போம் என்று விஷால் கூறினார்.

Advertisement

பள்ளி பருவத்தில் நாங்கள் இருவரும் வேறு பள்ளிகளுக்குச் சென்று சைட் அடிப்போம் என்றும் விஷால் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட உதயநிதிஸ்டாலின், சைட் அடித்த பள்ளி லிஸ்டில் தமது மனைவி படித்த பள்ளியை மட்டும் விஷால் குறிப்பிடவில்லை. இதனால் வீட்டில் சண்டை வரலாம் என்றும் நகைச்சுவையாக கூறினார். இதனைத் தொடர்ந்து ரோபோ சங்கர் நடிகர் விஷால் கலாய்த்து பேசினார். அப்போது விஷால் திடீரென்று ரோபோ சங்கரை அடித்தார். இதனால் மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது கடைசியில் இருவரும் இணைந்து நடித்ததாக கூறினர். தமது படத்தில் ரோபோ சங்கர் எப்போதுமே இருப்பார் என்றும் தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதாகவும் விஷால் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top