Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஅணு வேணும்னு வரானுங்க.. குட் நைட் படம் போல் எடுத்து பெண்களை மீண்டும் தள்ளிவிடாதீர்..!

அணு வேணும்னு வரானுங்க.. குட் நைட் படம் போல் எடுத்து பெண்களை மீண்டும் தள்ளிவிடாதீர்..!

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் குட் நைட். இது 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து நல்ல சாதனையை படித்தது. மேலும் இந்த திரைப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் குட்நைட் திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் ரமேஷ் திலக், மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் மீதா ரகுநாத்தின் கேரக்டர் ரசிகன் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

அவரைப் போல ஒரு நல்ல மனைவி வேண்டும் என்று 90 கிட்ஸ் மீண்டும் புலம்ப தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் கதாநாயகியின் கேரக்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல வழக்கறிஞர் திலகவதி சகித்துப் போகும் பழக்கத்தை புனிதப்படுத்த வேண்டாம் என்று இயக்குனர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் Good Night” படம் ஒரு நல்ல, இயல்பான, ரசிக்கக்கூடிய படம். அது இப்ப OTT ல வந்ததுல இருந்து, வரிசையா வன்ட்டாங்க…யாமினி, பொம்மி னு சுத்திட்டு இருந்தவங்கலாம் இப்ப மறுபடியும் “அனு” வேணும் னு வரானுங்க…

- Advertisement -

இதுல அனு
கதாபாத்திரத்தை ஆராய்ச்சி பண்ணி பாத்தால், அவ்ளோ ஒரு அடக்கமான, அமைதியான, Introvert ஆன, தான் மனதளவில் காயம் அடைவதை கூட வெளியில் சொல்லாத ஒரு பெண்.
குறிப்பா, self hurt பண்ணிக்கிற பொண்ணா இருக்காங்க..
அப்டிபட்ட பொண்ணு வேணும் கேக்குறது, மூலமா எப்படிப்பட்ட ஆணாக நாம இருக்கோம்னு சுயபரிசோதன பண்ணிக்கோங்க…

Introverts ஓட உணர்வுகள, தேர்வுகள நாம மதிக்கிறோம். ஆனால் சிலர், Introvert ன்ற பேர்ல, சில விஷயங்கள செய்றத   அவங்களோட, பெற்றோர் அவங்கள சின்ன வயசுல இருந்து பாத்து பழகுனவங்க, நண்பர்களு க்கு அவங்க வாழ்க்கைல அவங்க ஒரு பகுதியா ஏத்துப்பாங்க.

ஆனால் அவங்களோட பார்ட்னர்?? அவங்க கூடவே இருக்கவங்க.. அவங்கள பத்தியே யோசிச்சிட்டு இருக்கவங்க.. அவங்க கிட்ட உங்க உணர்வுகள வெளிப்படுத்தாமல் , உங்க தேவைகளை சொல்லாமல் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு, ஏத்துக்கிட்டு, நான் அமைதியாவே இருப்பேன்றது, Nothing but Toxic….!!! அது யாருக்குமே நல்லதில்ல.

அதுலயும், பெண்கள் இப்ப தான், “அந்த அமைதிய” ஒடச்சி, தங்களோட தேவைகள பேச ஆரம்பிச்சிருக்காங்க..ஆனா திரும்பவும், அமைதியா, எல்லாத்தையும் “அனு”சரிச்சிட்டே போற “அனு”க்கள புனிதப்படுத்தி  திரும்பவும் அதுக்குள்ளயே தள்ளிராதிங்க.

அதே போல, திருமணத்திற்கு முன்னாடியே தன்னோட இந்த குறட்டைய பத்தி மோகன் அனுக்கிட்ட சொல்லாததுன்றது ஒரு Ethical Error.
தங்களோட, உணர்வை  ஒரு அமைதியான முறையில் வெளிப்படுத்தி  சரிபண்ற காதல் மட்டும் தான் அழகானது…அத செய்யுற பார்ட்னர்ஸ் மட்டும்தான் , கொண்டாடப்பட வேண்டியவர்கள்…

Most Popular