சினிமா

அட இது லிஸ்ட்லயே இல்லயே.. ! லியோ படத்தின் கேஷ்மிர் ஷூட்டிங்கில் லெஜன்ட் சரவாணா அண்ணாச்சி.. !

Legend Saravana in Leo

தமிழ் சினிமாவில் அடுத்த 6 மாதத்திற்கு பெரிய டிரெண்டாக இருக்கப் போவது கமலின் இந்தியனோ ஜெயிலரோ அஜித் 62 படமோ அல்ல. லோகேஷ் கனகராஜ் & கோ விஜய் மற்றும் கோலிவுட் பிரபலங்களை வைத்து இயக்கும் லியோ படம் தான். துவக்கத்தில் தளபதி 67 என அழைக்கப்பட்ட இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏராளம். சென்ற ஆண்டு வாரிசு ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் முதலே பெரும் பேச்சாக இருந்தது.

எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனத் தவியாய்த் தவித்தனர் ரசிகர்கள். திட்டமிட்டபடி வாரிசு வெளியாகி 10 நாட்கள் கழித்து தொடர்ந்து 4 நாட்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கியது படக்குழு. லியோ எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ இறுதியாக வெளியானது. அதைப் பார்க்கையில் லோகேஷ் பெரிய விருந்து சமைக்கிறார் எனத் தெளிவாக தெரிகிறது.

Advertisement

தன் கேரியர் முழுவதும் மல்டி ஸ்டாரர் படங்களாக எடுத்து வந்த லோகேஷ் இம்முறையும் அதையே தொடர்கிறார். இந்த முறை மிகப் பெரிய பட்டாளம் கையில் இருக்கிறது. இது போன்ற மல்டி ஸ்டாரர் படங்களில் அனைத்து நடிகர்களுக்கும் சரியான ஸ்கிரீன் ஸ்பேஸ் தருவது மிகவும் சவாலானது, இதுவரை தரமாக செய்து வந்த லோகேஷ் லியோ படத்திலும் பக்காவாக செய்து முடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஷூட்டிங் தற்போது கேஷ்மிரில் நடந்துக் கொண்டிருக்கிறது. லியோ படத்தில் விஜய், சஞ்சய் தத், திரிஷா, திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலி கான், மாத்யூ தாமஸ், சான்டி மாஸ்டர், அபிராமி என நினைவில் வைத்து சொல்ல முடியாத அளவிற்கு பெரிய பெரிய ஆட்கள் நடிக்கின்றனர். இவர்கள் தவிர்த்து நெப்போலியன், ஏஜென்ட் டீனா என உள்ளே பலர் இருக்கின்றனர்.

Advertisement

கேஷ்மிரில் லெஜன்ட் சரவணா அண்ணாச்சி

துவக்கத்தில் தன் கடை விளம்பர படத்தில் நடித்து வந்த லெஜன்ட் சரவணா தன் விருப்பத்தால் தானே தயாரித்து வெளியிட்ட படம் ‘ தி லெஜன்ட் ’ ஆகும். சென்ற வருடம் ஜூலை மாதம் வெளியாகிய இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமாகவே தியேட்டரில் ஓடியது. என்னதான் நெட்டிசன்கள் அவரை கேலிப் பொருளாக பார்த்தாலும் தொடர்ந்து அடுத்த படத்தை உருவாக்குவதாக தெரிவித்தார்.

அவர் கூறிய அந்தப் படத்திற்கு முன் மிகப் பெரிய படத்தில் கால் பதிப்பது அவரது லிஸ்ட்டில் கூட நிச்சயம் இருந்திருக்காது. கேஷ்மிரில் நடந்து கொண்டிருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் லெஜன்ட் சரவணா அண்ணாச்சி இணைகிறார் என்ற செய்தி வைரலாகி பரவி வருகிறது. தற்போது கேஷ்மிரில் அவர் எடுத்த இரண்டு செல்பிகள் தான் டாப் டிரெண்டிங் ! சினிமா விமர்சகர்கள் சிலரும் அவரின் படத்தைப் போட்டு ‘” பெரிய செய்து விரைவில் வரவிருக்கிறது ” எனப் பதிவிட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top