சினிமா

அஜித், விஜய் எல்லாம் ஓரம் போங்க! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய லெஜண்ட் சரவணன்

கனவுக்கு வயது தடை இல்லை என்பதை நிரூபித்தவர் தான் நமது அண்ணாச்சி லெஜன்ட் சரவணன், தமிழகத்தின் தலைசிறந்த ஜவுளி நிறுவனமாக விளங்கிவரும் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபர் அருள் சரவணன் தன்னுடைய நீண்ட கால ஆசையாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை தனது சொந்தம் படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்.

Advertisement

இதற்காக முதலில் விளம்பரப் படங்களில் நடித்த அருள் சரவணன் பிறகு லெஜன்ட் என்ற படத்தில் நடித்தார். இது கலவையான விமர்சனத்தை ரசிகர்களிடையே பெற்றது என்றாலும், ஓடிடியில் ரிலீஸ் ஆனவுடன் ஹாட் ஸ்டார் இல் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. இதன் மூலம் லெஜெண்ட் சரவணன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஓடிடியில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து லெஜெண்ட் சரவணன் தற்போது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கி விட்டார். இதற்காக காஷ்மீருக்கு சென்ற லெஜென் சரவணன் தற்போது ஒரு புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். மாற்றம் என்பது தான் மாறாதது என்று சொல்வார்கள் அதற்கு ஏற்றார் போல் விஜய் போன்ற நடிகர்கள் ஒரே கெட்டப்பில் நடித்து வரும் நிலையில் லெஜெண்ட் சரவணன் தன்னுடைய இரண்டாவது படத்திலேயே கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.

Advertisement

இதற்காக போட்டோ சூட் ஒன்றை அவர் நடத்தி தற்போது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அனைவரும் லெஜன்ட் சரவணனா இது ஆளே மாறிட்டாரு என்று ஆச்சரியத்தில் மிதந்து வருகின்றனர். இதற்கு காரணம் லெஜெண்ட் சரவணன் தாடி வைத்து முகத்தில் ஏதோ மாற்றம் செய்திருக்கிறார்.

இதன் காரணமாக கல்லூரி மாணவன் போல் காட்சி அளிக்கிறார். தான் நடிக்க வேண்டும் என்ற ஒரே ஆசைக்காக லெஜன்ட் சரவணன் எடுத்த இந்த முயற்சி ரசிகர்களை கவர செய்துள்ளது. லெஜன்ட் சரவணன் இந்த அவதாரம் எந்த படத்திற்கு என்று அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நாம் ஒரு பணியை செய்யும் போது எவ்வளவு கேலி கிண்டல் சந்தித்தாலும் அதற்கு காது கொடுக்காமல் முன்னேறிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதற்கு லெஜன்ட் சரவணன் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top