நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் தற்போது ஒரு சாதனையை படைத்திருக்கிறது. அதாவது கடந்த வார இறுதியில் உலக அளவில் ரிலீஸ் ஆன திரைப்படங்களில் அதிக வசூல் படைத்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றிருக்கிறது.
உலக திரைப்படங்களில் வசூலை கணித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நிறுவனம் தான் காம் ஸ்கோர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கிடைக்கப்பெற்ற வசூலை மட்டும்தான் அதனை வெளியிடும். இந்த காம் ஸ்கோர் பட்டியலில் தற்போது லியோ முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிறுவனம் வெளியிட்ட படங்களில் தமிழ் படம் இதற்கு முன் இடம்பெற்றது கிடையாது. லியோ தான் முதல்முறையாக இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் லியோ திரைப்படம் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பார்த்தால் லியோ திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 404 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஒரு தமிழ் படம் அதிவேகமாக 400 கோடி ரூபாயை வசூல் செய்தது இதுவே முதல் முறையாகும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஏழு நாட்களில் 373 கோடி ரூபாய் வசூல் பெற்றது சாதனையாக இருந்தது.
தற்போது அதனை லியோ திரைப்படம் 4 நாட்களில் முறியடித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படம் தமிழகத்தில் நான்கு நாட்களில் அதிவேகமாக 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.
நான்கு நாட்களில் 113 கோடி வசூலை லியோ பெற்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நேற்று கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் வரை லியோ வசூலை பெற்றிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை இருப்பதால் லியோ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 150 கோடி ரூபாயை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி தீபாவளிக்கு தான் பெரிய படங்கள் வரும் என்பதால் அதற்குள் லியோ மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று கேரளாவில் 35 கோடி ரூபாய் வசூலை நான்கு நாட்களில் லியோ படைத்திருக்கிறது .இது அந்த மாநிலத்தில் இதுவரை கண்டிராத வசூல் சாதனையாகும்.