Tuesday, May 21, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படைத்த மாபெரும் சாதனை.. அமெரிக்கா, துபாயில் உடைக்கப்பட்ட ரஜினி ரெக்கார்ட்ஸ்

லியோ படைத்த மாபெரும் சாதனை.. அமெரிக்கா, துபாயில் உடைக்கப்பட்ட ரஜினி ரெக்கார்ட்ஸ்

தமிழ் சினிமாவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நிமிடத்திலே அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டது. மேலும் நடிகர் விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் இருக்கும்.

ஆனால் லியோ திரைப்படத்திற்கு 9:00 மணி காட்சிகள் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய்விட்டது .இந்த நிலையில் லியோ திரைப்படம் முன்பதிவில் மாபெரும் சாதனைகளை படைத்து இருக்கிறது.

- Advertisement -

அமெரிக்காவில் லியோ திரைப்படம் முன்பதிவிலே இந்திய ரூபாய் மதிப்பில் 10 கோடியையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்பதிவிலேயே 12 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு இருப்பதாக படத்தை வெளியிட்டுள்ள விநியோகஸ்தர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் மூலம் அமெரிக்கா மற்றும் துபாயில் நடிகர் ரஜினியின் சாதனையை லியோ முறியடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தமிழ் சினிமா வரலாற்றில் ஐரோப்பாவில் முதல் நாளில் ஒரு மில்லியன் டாலர் வசூல் சாதனையை லியோ படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு ஒட்டுமொத்த இந்திய திரைப்படங்களும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை மேலும் முதல் நாள் வசூல் நூறு கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக ஜெயிலில் தான் முதல் நாளில் 91 கோடி ரூபாய் வசூலை படைத்திருந்தது இந்த ரெக்கார்டிங் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Most Popular