தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது லியோ தான். லியோ திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை ஏற்கனவே நான்கு போஸ்டர்களை வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த நிலையில் அனைவரும் தற்போது எதிர்பார்க்கக் கூடியது லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தான். ஏனென்றால் நடிகர் விஜய் தொடர்பாக அண்மை காலங்களில் பல விமர்சனங்களும் பல திட்டமிட்ட கருத்துக்களும் வெளிவருகிறது.
இதை யார் செய்கிறார்கள் எதற்கு செய்கிறார்கள் என்று யாருக்குமே புரியவில்லை எப்போது விஜய் நம்பர் ஒன் என்று கூறப்பட்டாரோ அன்றிலிருந்து பிரச்சனைகள் அதிகமாகிவிட்டது. மேலும் விஜய்யின் அரசியல் தொடர்பான நகர்வுகளும் அவருக்கு பல பிரச்சனைகளை உருவாக்கி விட்டன.
இந்த நிலையில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தில் காக்கா,கழுகு கதை குறித்து கூறினாரோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ஏதேனும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த லியோ ஆடியோ லாஞ்சை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ படத்திற்கான இசை வெளியீட்டு விழாவில் பாஸ்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் எப்போது இசை வெளியீட்டு விழா நடக்கும் எங்கு நடக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இது போன்ற பாஸ்களை நம்பி யாரும் வாங்க வேண்டாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
லியோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிலர் அதனை காசாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் இதனை நம்பி விஜய் ரசிகர்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
லியோ ஆடியோ லான்ச் பாஸ் இன்னும் தயாராகவே ஆகவில்லை என்றும் அது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆடியோ லான்ச் பாஸ் பெரும்பாலும் இலவசமாக தான் இருக்கும் என்றும் இதனால் அதனை காசு கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.