Tuesday, November 19, 2024
- Advertisement -
Homeசினிமாமாநாடு போல் நடக்கப் போகும் லியோ பாடல் வெளியிட்டு விழா.. 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

மாநாடு போல் நடக்கப் போகும் லியோ பாடல் வெளியிட்டு விழா.. 50,000 பேர் பங்கேற்க ஏற்பாடு

நடப்பாண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் என்றால் அது லியோ தான். இந்த படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் விஜயின் ஒவ்வொரு படத்திலும் மிக முக்கியமாக கருதப்படுவது பாடல் இசையில் வெளியீட்டு விழா தான். எப்போதும் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் 2000 முதல் 3000 ரசிகர்கள் வரை பங்கேற்பார்கள்.

இசை வெளியிட்டு விழா

மேலும் அதில் விஜய் பல்வேறு கருத்துகளையும் குட்டி கதைகளில் பேசுவார். இதனை கேட்பதற்காகவே விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு அரசியல் ஆசை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை அடிக்கடி தற்போது கூறி வருகிறார். அண்மையில் மாணவர்களை வைத்து நடத்திய விழாவும் அவருடைய அரசியல் நகர்வாக தான் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா வைத்து நடிகர் விஜய் ஒரு பிளான் வைத்திருக்கிறார்.

- Advertisement -

மாநாடு

அதன்படி லியோ இசை வெளியீட்டு விழாவை ஒரு மாநாடு போல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக மதுரையில் 50,000 பேர் ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய நிகழ்ச்சியை நடிகர் விஜய் ஏற்பாடு செய்யவிருக்கிறார்.இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வெளியிடுகின்றனர்.

அரசியல் நிகழ்வு

இதன் மூலம் ஒரு இசை வெளியீட்டு விழாவில் அதிகம் பேரும் பங்கேற்றது. இதுதான் என்ற சாதனையை லியோ படைப்பு இருக்கிறது. எப்போதும் சென்னையில் நடத்தப்படும் விழாவை மதுரையில் விஜய் நடத்தமிட்டு இருப்பதால் இது விஜயின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

விஜயின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது லியோவின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Most Popular