நடிகர் விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான லியோ ஷூட்டிங் பணிகளை முடித்துவிட்டு தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் ஈடுபட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதி வாரம் முதல் புரொமோஷன் பணிகளையும் படக்குழு துவங்குகிறது.
மிகப் பெரிய லாபத்தை பெற எண்ணுவதால் லியோ படக்குழு புரொமோஷனில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்கள் அனைத்துக் ஹிந்தியில் சிறப்பாக ஓடியதால் தான்.
அதற்கு சிறந்த உதாரணம் கே.ஜி.எப், ஆர்.ஆர்.ஆர் போன்றவை. லியோ படமும் அதனைச் செய்தால் மட்டுமே பெரிய அளவில் சாதிக்க முடியும். இதற்காக 10 கோடி ரூபாய் தனியாக வட இந்தியாவில் புரொமோஷனுக்காக ஒதிக்கியுள்ளனர்.
பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்ட வெளிநாட்டு இசை வெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. துபாயில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்கு தேவையான தேதிகளில் இடம் கிடைக்காததால் படக்குழு அதனை ரத்து செய்து தமிழகத்தில் நடத்த திரும்பியுள்ளது.
எப்போதும் விஜய்யின் படங்கள் சென்னையில் நடக்கும் குறிப்பாக பெரும்பான்மையான பெரிய நிகழ்ச்சிகள் நேரு உள் அரங்கத்தில் தான் நடக்கும். லியோ படமும் அதனையே செய்யும் என பலர் கணித்தனர். அதற்கு மாறாக படக்குழு வேறொரு திட்டத்தில் வந்துள்ளது.
இம்முறை மதுரை அல்லது கோயம்பத்தூரில் இசியா வெளியீட்டு விழா நடக்கும் என ஏற்கனவே ஒரு செய்தி பரவியது ஆனால் அது உறுதியாக யாரும் சொல்லவில்லை. இன்று பிரபலமான சினிமா நிருபர்கள் அதனை உறுதி செய்துள்ளனர். மதுரை அல்லது திருச்சியில் நடத்துவதே பிளான் ஏ. இது தவறினால் மட்டுமே சென்னை. அதாவது சென்னை பிளான் பி தான். செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என தகுந்த வட்டாரங்களில் சொல்கின்றனர்.
தென் தமிழக விஜய் ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அரசியில் நோக்கில் விஜய் இதை செய்கிறார் என்கின்றனர் சிலர். அப்படியே இருந்தாலும் அதில் தப்பில்லையே, எப்படியும் 2024 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் நிற்கத்தான் போகிறார்.