தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் என்றால் அதில் லியோ தான். நடிகர் விஜய் திரைப்பட வாழ்க்கை வரலாற்றிலேயே அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்று இருக்கிறது.
12 நாட்களில் 540 கோடி ரூபாயை இந்த திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு பிறகு திரையரங்கு நோக்கி மக்கள் மீண்டும் வர தொடங்கி இருக்கிறார்கள்.
தீபாவளி வரை இந்த படம் ரிலீசும் வெளியாகவில்லை என்பதால் லியோ திரைப்படத்தை பார்ப்பதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. இதனால் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை ஜியோ பெரும்பாலான பகுதிகளில் முறியடித்திருக்கிறது. இந்த வார இறுதியில் ஜெயிலர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முறியடிக்கும் என திரைப்பட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை தமிழ்நாடு, கேரளா, ஐக்கிய அரபு அமீரகம்,இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, வட இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை லியோ முறியடித்து விட்டது. இன்னும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஜெய்லர் வசூல் விட லியோ இரண்டாவது இடமாக பின் தங்கி இருக்கிறது. தீபாவளி வரை வெளிநாடுகளில் ஓடினால் லியோ திரைப்படம் அனைத்து பகுதிகளிலும் ஜெயிலர் வசூலை முறியடித்து நடப்பாண்டில் வெளியாகி அதிக வசூலை பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெறும்.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக எவ்வளவு வசூல் பெற்றது என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. ஆனால் 610 கோடி ரூபாய் வரை ஜெயிலர் வசூலித்திருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதனை லியோ வரும் திங்கட்கிழமை முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.