Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாஇன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி! பிரம்மாண்ட சாதனை படைத்த லியோ

இன்னும் 5 கோடி தான்.. ஜெயிலர் வசூல் காலி! பிரம்மாண்ட சாதனை படைத்த லியோ

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை இருந்ததால் திரையரங்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

- Advertisement -

இதன் மூலம் முதல் வாரத்தில் தமிழ் சினிமா வரலாற்றிலே அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றது. எனினும் லியோவுக்கு தொடர்ந்து இணையதளத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சிலர் கிளப்பி விட்டார்கள்.

ஆனால் அதையும் மீறி லியோ திரைப்படம் தொடர்ந்து சாதனையை படைத்தது இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் லியோ திரைப்படம் 225 கோடி ரூபாயை வசூல் பெற்று இருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இதன் மூலம் தமிழக திரையரங்கு வரலாற்றிலேயே அதிக வசூல் குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சாதனையை லியோ முறியடித்திருப்பதாக தெரிகிறது. இதனால் ஜெய்லர் 195 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

இதேபோன்று உலக அளவில் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையும் லியோ பெற்றிருக்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற வெளிநாடுகளில் 202 கோடி வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் லியோ திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது.

இதன் மூலம் ஒட்டுமொத்த வசூல் 602 கோடி என்ற அளவில் இருக்கிறது. ஜெயிலர் திரைப்படம் 605 கோடி ரூபாய் வசூல் நிகழ்த்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதனை லியோ முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக திரைப்பட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி வார நாட்களில் லியோ திரைப்படத்திற்கு கூட்டம் வரும் என்றும் அதன் பிறகு 25வது நாள் விழா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்பதால் லியோ திரைப்படம் ஜெயிலரின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடிகர் விஜய் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்திருப்பதாக திரைத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா வரலாற்றில் 2.0 முதல் இடத்திலும் ஜெயிலர் இரண்டாவது இடத்திலும் லியோ, மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த வார இறுதியில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என கூறப்படுகிறது.

Most Popular