சினிமா

சென்னையில் நடக்கும் லியோ ஷூட்டிங் தேதி அறிவிப்பு.. ! மிகப் பெரிய ஹீரோவும் இணைகிறார்.. !

Leo Vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் ஓர் மிக பிரம்மாண்ட பட்டாளம் நடிப்பில் தயாராகும் திரைப்படம் லியோ. விஜய்யுடன் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர், அலி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் திரையை பகிர்கின்றனர். இப்படம் ‘ தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் ’ எனும் ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் எனக் கூறுகின்றனர், ஆனால் இன்னும் அதைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை.

வெளியான புரோமோ மற்றும் கேஷ்மிர் காட்சிகளைப் பார்க்கையில் அச்செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பரபரப்பான கேஷ்மிர் ஷெடியூல் சென்ற வாரம் வெற்றிகரமாக முடிவடைந்தது. தாங்க முடியாத குளிரில் அதிகாலை இரவு என விடாது படப்பிடிப்பில் செயல்பட்ட ஊழியர்களை பாராட்டி தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.

Advertisement

லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆயுத பூஜை பண்டிகை தினங்களில் வெளியிட்டு லாபத்தை திரட்டவே இத்திட்டம். அதனால் லோகேஷ் தலைமையிலான குழு விரைந்து பணிகளை முடிக்கிறது. கேஷ்மிரில் அனைத்து வேலைகளும் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு.

அடுத்து சென்னை மற்றும் ஹைதராபாத் ஷெடியூல்கள் மட்டுமே பாக்கியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடர்புள்ளது. அதில் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் இணையவுள்ளார். படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கபடவுள்ளது. அது முடிந்த பிறகு ஏர்போர்ட் செட் அனைத்து கிளைமாக்ஸ் காட்சிகளைப் படம்பிடிக்க ஹைதராபாத்துக்கு படக்குழு செல்கிறது.

Advertisement

லோகேஷ் கனகராஜ் & கோ உருவாக்கும் இப்படத்தின் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. இப்படம் எல்.சி.யூவில் இருக்கிறதா அல்லது தனித் திரைப்படமா எனத் தெளிவாக தெரியவில்லை. அதைப் படக்குழு ரகசியமாக வைத்திருக்கவும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. ரீலீஸ் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top