Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினியின் 2 பெரிய படங்களின் வசூல் சாதனை காலி.. அதிரடி காட்டும் லியோ.. மீசை ராஜேந்திரன்...

ரஜினியின் 2 பெரிய படங்களின் வசூல் சாதனை காலி.. அதிரடி காட்டும் லியோ.. மீசை ராஜேந்திரன் மீசைக்கு நேரம் நெருங்கியது.. !

இளைய தளபதி விஜய் தன் புகழின் உச்சியில் இருக்கிறார் என்பதை மீண்டும் ஓர் முறை நிரூபித்துள்ளார். இந்த முறை பல மடங்கு உயர்வாக. லோகேஷ் கனகராஜுடன் எல்.சி.யூவில் இணைந்து லியோ படத்தை செய்தார் விஜய். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் பல்வேறு சிக்கல்களைத் தாண்டியும் அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

- Advertisement -

இரண்டாம் பாதி குறித்து சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலும் 80% பார்வையாளர்கள் மகிழ்ந்து பார்த்தனர். மறுபக்கம் வசூலில் பல சாதனைகளை புரட்டிப் போட்டுள்ளது லியோ. முதல் 4 நாளில் 400 கோடிக்கு அருகில் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. இது எதிர்பார்த்தது தான். விஜய்க்கு இருக்கும் பிரபலதிற்கு அவரின் படங்கள் எதுவாதாக இருக்கும் குறைந்தது 200 கோடி அடித்துவிடும்.

லியோ திரைப்படம் தமிககதில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடக, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் கூட அதிக வசூல் செய்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலகளவில் லியோனார்டோ டிகாப்ரியோ – மார்ட்டின் ஸ்கார்சசேவின் ‘ கில்லர்ஸ் ஆப் தி ஃபிளவர் மூன் ’ படத்தையே வர்த்தகத்தில் வென்றது.

- Advertisement -

12ஆம் நாள் முடிவில் உலக அளவு வசூல் எவ்வளவு என்ற தகவலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இதுவரை லியோ படம் 540+ கோடிகள் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த்தின் பெரிய படங்களான ஜெயிலர் மற்றும் 2.0 ஆகிய இரண்டையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

- Advertisement -

தமிகழகத்தைப்பொறுத்தவரை இப்போது லியோ தான் முதலிடத்தில் உள்ளது, உலகளவில் அல்ல. மொத்தத்தில் ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடிக்க இன்னும் 20 கோடிகள் மட்டுமே தேவை. அதை மிகவும் எளிதில் ஓரிரு நாட்களில் செய்துவிடும். அப்படி நடந்தால் மீசை ராஜேந்திரன் தன் மீசையை எடுத்துக் கொள்வதாக கூறினார். அந்த விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

அடுத்த நேர்காணலில் இது குறித்து அவரிடம் பேசும் போது அவர் எனச் சொல்லி முட்டுக் கொடுப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். லியோ படம் விஜய்யின் சினிமா வாழ்கையில் முதல் 500 கோடி படம் ஆகும். திரையரங்குகளை விட்டு வெளியேறும் முன் 600 – 650 கோடி வரை செல்லும்.

Most Popular