Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவில் புதிய சாதனை

லியோ வெளிநாட்டு உரிமம் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவில் புதிய சாதனை

- Advertisement -

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் லியோ. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம், பாடல்கள் உரிமம் அனைத்தும் 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் என்ற பெருமையை லியோ பெற்றுள்ளது. இந்த நிலையில் லியோ படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கான வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்ற கடும் போட்டி எழுந்துள்ளது. விஜய் திரைப்படத்திற்கு அதிகபட்சமாக வெளிநாட்டு உரிமம் 30 முதல் 35 கோடி ரூபாய்க்கு விற்கப்படும்.

- Advertisement -

ஆனால் லியோ திரைப்படத்திற்கு 60 கோடி ரூபாய் வரை வெளிநாட்டு உரிமம் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தமிழ் சினிமாவின் அதிகபட்ச தொகையாகும். தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படமே வெளிநாட்டிலிருந்து 53 கோடி ரூபாய் தான் share ஆக கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இது போன்ற விக்ரம்க்கு 50 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருக்கிறது. ஆனால் இவ்விரண்டையும் தாண்டி 60 கோடி ரூபாய்க்கு லியோ திரைப்படம் விற்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது இந்தப் படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் அமைந்துள்ளதாக திரைப்பட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை விஜய் நடித்த படங்களில் பிகில் மற்றும் வாரிசு திரைப்படம் சுமார் 70 லிருந்து 80 கோடி ரூபாய் வரை வெளிநாட்டில் இருந்து மட்டும் பெற்றுள்ளது. தற்போது லியோ திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டால் வெளிநாட்டில் இருந்து மட்டும் 110 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ய வேண்டும். லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரும் விஜய் என்ற ஸ்டாரையும் நம்பி இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் முடிவு எடுத்துள்ளனர்.

Most Popular