Wednesday, November 20, 2024
- Advertisement -
Homeசினிமாகோவையில் லியோ சாதனை.. ஒரே திரையரங்கில் 101 காட்சி ஹவுஸ்புல்.. வசூல் எவ்வளவு தெரியுமா

கோவையில் லியோ சாதனை.. ஒரே திரையரங்கில் 101 காட்சி ஹவுஸ்புல்.. வசூல் எவ்வளவு தெரியுமா

2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடித்துள்ள லியோ தான். லியோ திரைப்படம் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இன்னும் சென்னை உட்பட சில நகரங்களில் மட்டும் டிக்கெட் இன்னும் விற்பனைக்கு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் லியோ திரைப்படம் கோவையின் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.

கோவையில் தற்போது பிராட்வே என ஒரு திரையரங்கம் கட்டப்பட்டு இருக்கிறது. அதில் ஐமேக்ஸ் திரையரங்கமும் பிஎக்ஸ்எல் எனப்படும் மிகப்பெரிய துறையும் அங்கு இடம்பெற்றிருக்கிறது. இங்கு ஒன்பது ஸ்கிரீன்கள் இருக்கிறது. இதில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் தொடங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஒரே சமயத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் ஆன்லைனில் புக்கிங் செய்ய முற்பட்டதால் அவர்களுடைய சர்வர் முடங்கி விட்டது. இதனால் ரசிகர்களை கவுண்டருக்கு வந்து டிக்கெட்டுகளை பெற்று செல்லுமாறு பிராட்வே நிறுவனம் அறிவித்தது.

- Advertisement -

இதனை அடுத்து ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன் காத்து டிக்கெட்டுகளை பெற்று சென்றனர். அந்த வகையில் இதுவரை அந்த ஒரு திரையரங்கில் மட்டும் 101 காட்சிகள் ஹவுஸ்புல்லாகி இருக்கும். இது கோயம்புத்தூரில் படைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சாதனை என தெரிகிறது.

மேலும் பிராட்வே சினிமாவில் மட்டும் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் வசூல் இதுவரை லியோ வசூல் செய்திருக்கிறதாம். முதல் மூன்று நாட்களுக்கு இந்த நிலைமை என்றால் இன்னும் படம் 20 நாட்களுக்கு ஓடினால் மிகப்பெரிய ரெகார்டை லியோ திரைப்படம் கோவையில் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தை imax திரையரங்கிலும் காணலாம் என பட குழு அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஐ மேக்ஸ் திரையரங்கில் லியோ திரைப்படத்தை காண ரசிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள். சென்னையில் இன்னும் ஐமேக்ஸ் திரையரங்களுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular