Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமா“ ரெடியா ” விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. ! இந்த...

“ ரெடியா ” விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்கும் லோகேஷ் கனகராஜ்.. ! இந்த அப்டேட்டில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ள லியோ.. !

பிரம்மாண்ட படையுடன் மிகுந்த எதிர்பார்ப்பை கையில் கொண்டு தயாராகி வரும் திரைப்படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் 2வது முறையாக கைகோர்த்து பணிபுரிந்து வருகிறார் நடிகர் விஜய். ஜனவரி மாதம் பூஜை மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்போடு ஷூட்டிங் துவங்கியது.

- Advertisement -

முதல் அட்டவணையை கேஷ்மிரில் நிறைவு செய்து சென்னையில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. எந்தப் படமாக இருந்தாலும் ஜூன் மாதம் என வந்துவிட்டால் ரசிகர்களுக்குத் தவறாமல் அப்டேட் கொடுத்துவிடுவார் தளபதி விஜய். ஜூன் 22ஆம் தேதி அவரது பிறந்தநாள் திரைப்பட வெளியீடு போல சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும்.

தனது 49வது பிறந்தநாளுக்கு விஜய் அடுத்தடுத்து இரண்டு அறிவிப்புக்கள் கொடுக்கவுள்ளதாக முன்னர் செய்திகள் பரவின. ஒன்று லியோ மற்றொன்று வெங்கட் பிரபுவுடன் இணைந்து செய்யும் படம். ஆனால் இப்போது வரை லியோ அப்டேட் பற்றி மட்டுமே தகவல்கள் கிடைத்து வருகின்றது.

- Advertisement -

இதுவரை லியோ படக்குழு படத்தில் நாடிப்பவர்களின் பட்டியல், ஓர் புரோமோ மற்றும் கேஷ்மிர் படப்பிடிப்பின் மேக்கிங் வீடியோ என மூன்று பெரிய அறிவிப்புகளை கொடுத்துள்ளது. வருகின்ற பிறந்தநாளில் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் ஃபர்ஸ்ட் லுக் வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் & கோ ஒரு படி மேல் சென்று இன்னும் பெரிதாக செய்யவுள்ளனர். லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுந்த வட்டாரங்களிலும் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். புரோமோவில் வந்த ‘ ப்ளடி ஸ்வீட் ’ பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசை என்பதால் வருந்தத் தேவையே இல்லை, சிறப்பாகச் செய்து தந்துவிடுவார்.

விஜய் பாடல்கள் படைத்த சாதனைகளை அவரே மீண்டும் உடைக்கவுள்ளார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் “ ரெடியா ” என தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் உற்சாகத்தை தூண்டிவிட்டுவிட்டார். படத்தின் பாடல் எப்போது என்பதை ஓர் போஸ்டராக வெளியிட்டு பின்னர் பாடல் வெளியீட்டுக்கு முன் அதற்கு ஓர் புரோமோ என அடுத்த 5 நாட்களுக்கு பட்டையைக் கிளப்பப் போகிறார்கள்.

Most Popular