Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ முதல் நாள் வசூல்.. 2023 ஆம் ஆண்டில் முதல் இடம்..ஜவான், ஜெய்லர் ரெக்கார்ட் முறியடிப்பு

லியோ முதல் நாள் வசூல்.. 2023 ஆம் ஆண்டில் முதல் இடம்..ஜவான், ஜெய்லர் ரெக்கார்ட் முறியடிப்பு

தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத வசூல் சாதனையை தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் படைத்திருக்கிறது. லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

- Advertisement -

படம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ள நிலையில் நடுநிலை ரசிகர்களும் ஒரு சில மைனஸ்களுடன் படம் நன்றாகவே இருக்கிறது என்று ஒட்டுமொத்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால், இந்த படத்தை பார்க்க வேண்டும் என மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளில் மகத்தான சாதனையை படைத்திருக்கிறது. அதாவது முதல் நாள் மட்டும் லியோ திரைப்படம் 145 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது.

- Advertisement -

இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் நாளிலே நூறு கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் லியோ படைத்திருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்பு ஜவான் 130 கோடி வசூல் செய்திருந்த நிலையில் அந்த ரெக்கார்டை தற்போது லியோ முறியடித்திருக்கிறது. ஜெய்லர் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இது மட்டுமல்லாமல் தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இரட்டை இலக்க வசூல்  தொட்ட ஒரே தமிழ் திரைப்படம் என்ற பெருமையும் லியோ பெற்று இருக்கிறது.

கேரள சினிமா வரலாற்றில் லியோ திரைப்படம் முதல் நாளில் 12 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு கேஜிஎப் 2 திரைப்படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்ததை சாதனையாக இருந்தது. இதனை தற்போது லியோ முறியடித்திருக்கிறது.

இதேபோன்று ஆந்திராவில் 18 கோடி ரூபாய் அளவிலும், கர்நாடகாவில் 14 கோடி ரூபாய் அளவிலும் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது. இதன் மூலம் இந்த மூன்று மாநிலங்களிலும் ஜெயிலர் முதல் நாள் படைத்த வசூல் சாதனையை லியோ தகர்த்து இருக்கிறது.

ஹிந்தி மார்க்கெட்டிலும் லியோ முதல் நாளில் ஐந்து கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தி இருக்கிறது. ஹிந்திக்கு இன்னும் நன்றாக ப்ரொமன்ஷன் செய்து இருந்தால் இது 10 கோடி ரூபாய்க்கு மேல் தாண்டி இருக்கும். இதேபோன்று அமெரிக்காவில் 15 கோடி ரூபாயும், ஐக்கிய அரபு நாடுகளில் 12 கோடி, ஐரோப்பிய நாடுகளில் 10 கோடி ரூபாயும் முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது.

Most Popular