Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாதுணிவு, அண்ணாத்த ஒட்டுமொத்த வசூலை 2 நாளில் காலி செய்த லியோ

துணிவு, அண்ணாத்த ஒட்டுமொத்த வசூலை 2 நாளில் காலி செய்த லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் விஜய் தன்னுடைய புதுவிதமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

- Advertisement -

இதனால் குடும்ப ஆடியன்ஸ்கள் பல தரப்பினர் தற்போது திரையரங்கம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.தொடர் விடுமுறை இருப்பதால் பல திரையரங்குகளில் டிக்கெட்டுகளும் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு லியோ திரைப்படம் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சிலர் படத்தில் மைனஸ் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளி திரையரங்கு நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் நீண்ட விடுமுறை நாட்களில் லியோ தவிர வேறு எந்த புதிய திரைப்படமும் இல்லை என்பதால் மக்கள் அதனை பார்த்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த நிலையில் இரண்டாவது நாளில் 60 முதல் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வரலாம் என தெரிகிறது.

- Advertisement -

மேலும் லியோ திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 200 முதல் 210 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் லியோ திரைப்படம் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை இரண்டே நாட்களில் முறியடித்து இருக்கிறது.

இதேபோன்று நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தையும் லியோ முறியடித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்,சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போன்ற வெளிநாடுகளிலும் லியோ பல சாதனைகளை படைத்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளா ஆந்திரா கர்நாடகாவிலும் லியோ வசூலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது.

Most Popular