Tuesday, May 21, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ 3 நாள் வசூல் எவ்வளவு? தமிழ் சினிமாவில் புதிய சாதனை

லியோ 3 நாள் வசூல் எவ்வளவு? தமிழ் சினிமாவில் புதிய சாதனை

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளை படைத்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை வெளியான லியோ திரைப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனமும் வந்தது.

- Advertisement -

எனினும் படத்தை இரண்டாவது முறை பார்த்தவர்கள் முதல் முறையை பார்த்ததை விட இரண்டாவது முறை நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்தார்கள். இதனால் தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக அனைத்து திரையரங்குகளுமே ஹவுஸ்புல் காட்சிகளாக நடைபெற்று வருகிறது. வெறும் தமிழகம் முழுவதும் உள்ள பிரதான திரையரங்குகள் 95 சதவீத பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் காட்சிகள் நடைபெற்று வந்தன.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதன்படி முதல் மூன்று நாள் வசூல் 290 முதல் 300 கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம் முதல் மூன்று நாட்களில் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையை லியோ படைத்திருக்கிறது.

- Advertisement -

இதேபோல் விஜயின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் முதல் நாள் வசூல்,இரண்டாவது நாள் வசூல், மூன்றாவது நாள் வசூல் ஆகியவற்றில் அந்த மாநிலத்தின் திரையரங்க வசூல் வரலாற்றிலே புதிய சாதனையை லியோ படைத்திருக்கிறது.

கேரளாவில் முதல் மூன்று நாட்களில் 23 கோடி வசூலையும் கர்நாடகாவில் 20 கோடி ரூபாய் வசூலையும் ஆந்திராவில் 23-25 கோடி ரூபாய் வசூலையும் லியோ பெற்றிருக்கிறது. தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் வசூல் 84 கோடி என்று அளவில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய நாள் டிக்கெட்டுகள் அனைத்தும் பெரும்பான்மையான திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறிவிட்டது. இதனால் இன்று மட்டும் தமிழகத்தில் முதல் நாள் வசூல் அளவுக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் 300 கோடி ரூபாயை தாண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை முடிவில் லியோ திரைப்படத்தின் வசூல் 450 கோடி ரூபாய் வரை வந்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

Most Popular