தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் லியோ. இதற்கு காரணம் இந்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானது. மேலும் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இந்த கூட்டணியுடன் இணைந்தார்.
இதைப் போன்று லியோ திரைப்படம் கைதி மற்றும் விக்ரமை பின் தொடர்ந்து வருமா என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். லியோ திரைப்படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
மேலும் முதல் முறை பார்த்ததை விட இரண்டாவது முறை பார்க்கும் போது படம் நன்றாகவும் இன்னும் நிறைய விஷயங்கள் புரியும் வகையில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இதன் அடுத்து பல ரசிகர்கள் விடுமுறை நாளை பயன்படுத்தி திரையரங்கில் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் லியோ லியோ திரைப்படம் ஐந்து நாட்களில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் ஐந்தாவது நாளில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதனால் தமிழகத்தில் மட்டும் லியோ ஐந்து நாட்களில் 144 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்றைய தினமும் விடுமுறை நாள் என்பதால் ஆறு நாட்கள் வசூல் 160 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று வெளிநாடுகளில் மட்டும் லியோ திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூலை வார இறுதி நாட்களில் பெற்றுள்ளது. இதன் மூலம் கே ஜி எஃப் 2 ,RRR, போன்ற வார இறுதி வசூல் சாதனையை லியோ முறியடித்திருக்கிறது.
தற்போது இந்திய படங்களிலே வார இறுதியில் இரண்டாம் அதிக வசூல் குவித்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்று இருக்கிறது. முதல் இடத்தில் பாகுபலி 2 இருக்கிறது. ஐந்து நாட்கள் ஒட்டுமொத்த வசூல் 450 முதல் 460 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இன்றும் விடுமுறை நாள் என்பதால் படம் ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் 500 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வட இந்தியா வெளிநாடு ஆகிய அனைத்து ஏரியாக்களிலும் விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுத்து விட்டார்கள். இன்றிலிருந்து கிடைக்கும் அனைத்து பணமும் அவர்களுக்கு லாபம் என்ற வகையில் சேரும். தமிழகத்தில் 80 சதவீதம் போட்ட பணத்தை எடுத்து விட்டார்கள்.