Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ 500 கோடி வசூல் சும்மா.. லாபமே தரவில்லை.. காரணம் இது தான் - திருப்பூர்...

லியோ 500 கோடி வசூல் சும்மா.. லாபமே தரவில்லை.. காரணம் இது தான் – திருப்பூர் சுப்ரமணியன் கடுப்பு

லியோ திரைப்படம் நான்கே நாளில் உலகெங்கும் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் புரிந்துள்ளது. தற்போது எப்படியும் 500 – 600 கோடிகளை நெருங்கியிருக்கு வாய்ப்புண்டு. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தலைசிறந்த இயக்குனரான மார்டின் ஸ்கார்சே – லியோனார்டோ டிகாப்ரியோ படமான ‘ தி கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன் ’ படத்தின் வசூலையே லியோ சென்ற வாரம் வென்றது. இத்தகு சாதனைகளை புரிந்து வரும் லியோ திரைப்படம் தமிழகத்தில் லாபம் தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கோது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் மிகுந்த சிக்கல்களைத் தாண்டித் தான் வெளியாகியது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் இல்லை என்பதால் கேரளாவிற்கு பயணித்து ரசிகர்கள் கொண்டாடினர். அது மட்டுமில்லாமல் டிக்கெட் விற்பனைகளிலேயே சென்னையில் பெரிய சிக்கல்.

- Advertisement -

ரீலீசுக்கு முந்தைய நாள் மாலை வரை 2 – 3 பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விற்பனைகள் செய்யாமல் இருந்தனர். லியோ படம் இங்கு வெளியாகது என ரோஹிணி & வெற்றித் திரையரங்குகள் ஒரு கட்டத்தில் அறிவித்து பெரிய குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கினார். அதன் பின்னர் எல்லா பிரச்சினைகளையும் மாலை 7 மணிக்குள் தீர்த்து வைத்து ரீலீஸ் செய்தனர்.

- Advertisement -

தற்போது, லியோ திரைப்படம் லாபமே தரவில்லை என தமிழக தியேட்டர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறி கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ லியோ திரைப்படமாக உலகெங்கும் பல நூறு கோடிகளை வசூல் செய்வதால் இங்கு தேவையான லாபம் வந்துவிட்டது என இல்லை. லியோ படம் இங்கு லாபமே இல்லை எனக் கூறவில்லை. ஆனால் தமிழகத்தில் வழங்கப்படும் வசதிகளுக்கு ஈடுகட்டும் அளவு பணம் வரவில்லை. ” என்றார்.

மேலும், “ கேரளாவில் 60 சதவீதம் பங்கு ஆனால் கன்னியாகுமரியில் 80 சதவீதம். இப்படி இருந்தால் எப்படி தமிழகத்தில் நல்ல லாபம் இருக்கிறது எனக் கூற முடியும். தீபாவளி வரை வேறு எந்தப் படமும் இல்லாததால் வேறு வழியின்றி தியேட்டர்கள் லியோவை வெளியிட்டுள்ளனர். ” என பாதி மனதுடன் பேசியுள்ளார்.

பெரிய படங்கள் வரும் போது தயாரிப்பாளர்கள் 80 சதவீதம் லாபம் கேட்பது மிகவும் அநியாயம். அது மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் டிக்கெட்டுகள் விலையும் குறைவு தான்.

Most Popular