Thursday, November 21, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ தயாரிப்பு நிறுவனம் - தியேட்டர்கள் வாக்குவாதம்.. பல இடங்களில் இன்னும் டிக்கெட் விற்பனையை துவங்கவில்லை.....

லியோ தயாரிப்பு நிறுவனம் – தியேட்டர்கள் வாக்குவாதம்.. பல இடங்களில் இன்னும் டிக்கெட் விற்பனையை துவங்கவில்லை.. !

விஜய்யின் அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமான லியோ இன்னும் 2 தினங்களில் ரீலீஸ் ஆகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால் வழக்கத்தை விட அதிகமான எதிர்பார்ப்புகள். அதோடு பல்வேறு பக்கங்களில் இருந்தும் சிக்கல்களும் குவிந்தன. தலைவா படத்தின் போது சந்தித்ததை விட குறைவு தான் ஆனால் அப்படத்திற்கு பின் தற்போது தான் அடுத்தடுத்து ரீலீஸ் சிக்கல்கள் விஜய் படத்திற்கு வருகின்றன.

- Advertisement -

எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்த போது முதல் சரிவாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இசை வெளியீட்டு விழா ரத்தானது. அதன் பின்னர் திட்டமிட்ட படி எதுவுமே நடக்கவில்லை. இவ்வளவு பெரிய படத்திற்கு எதிர்பார்த்த அளவு புரொமோஷன் செய்யவில்லை.

ஹிந்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் சரியாக எந்த வித ஒப்பந்தமும் போடாததால் பெரிய அளவில் அங்கு ரீலீஸ் ஆகவில்லை என குற்றச்சாட்டுக்கள் ரசிகர்கள் மத்தியில் உள்ளன. தற்போது தமிழகத்தில் டிக்கெட் விரோனைகள் மிகவும் பெரிய தலைவலியாக இருக்கிறது. தமிழக அரசு அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்காததால் செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவன நேற்று மேல் முறையீடு செய்தனர்.

- Advertisement -

இன்று முதல் கேஸாக விசாரித்த நீதிபதி அனிதா, “ அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவை தமிழா அரசிடமே விட்டு விடுகிறேன். ” எனக் கூறி முடித்துவிட்டார். இன்று அதற்காக மாலை சந்தித்து பேசவுள்ளனர். மாலை 9 மணிக்குள் தமிழக உள்துறை அமுதா தன் முடிவைக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதிகாலை காட்சிகள் இல்லாததால் முதல் நாள் லாபத்தில் சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால் சென்னை விநியோகிஸ்தர்கள் மற்றும் சில தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 75% லாபத்தை கேட்பதால் இன்னுமே கங்கா சினிமாஸ், ஏ.ஜி.எஸ், சங்கம், ரோஹிணி, ஈகா, வரதராஜா, கமலா போன்ற 10ககும் மேற்பட்ட திரையரங்குகள் இன்னும் டிக்கெட் விற்பனைக் துவங்கவே இல்லை.

இதற்கிடையே அதிகாலை காட்சிகளே அனாவாசியமற்றது, நாங்கள் 9 மமைக்கே துவங்குகிறோம் என சங்கத் தலைவர் சுப்பிரமணியன் பேசியுள்ளார். ரீலீசுக்கு இன்னும் 2 தினங்களே இருக்கும் பட்சத்தில் எந்த வித பிரச்சினைகளையும் தயாரிப்பாளர் சரியாக கையாளதது தவறு. அதே போல விளம்பரம் படுத்துவதிலும் பெரிதாக அவர் கவனம் செலுத்தவில்லை. அனைத்துச் சிக்கல்களும் இன்று இரவுக்குள் முடிவடைந்து இரவே ஆன்லைன் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular