தளபதி விஜய்யின் 67வது படமான லியோ இன்னும் ஒரு மாதத்திற்குள் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறை இப்படத்திற்காக இணைந்துள்ளார் விஜய்.
ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்தத் படத்தின் ஷூட்டிங் ஜூலை பாதியிலேயே முழுவதுமாக ஷூட் செய்யப்பட்டு விட்டது. எஞ்சி இருந்த பேட்ச் வேலைகளையும் படக்குழு முடித்துள்ளது. அனைத்து பணிகளும் நிறைவுப் பெற்று தளபதி விஜய் முழு படத்தையே பார்த்துவிட்டார்.
படம் அவருக்கு மிகவும் திருப்திப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டியுள்ளார். தற்போது லியோ படக்குழு தீவிர புரொமோஷனில் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் அனைத்து மொழி போஸ்டர்களையும் வெளியிட்டது. இரண்டாவது சிங்கிள், இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்து லியோ அப்டேட்கள் குவியவிருக்கிறது.
இன்னும் லியோ படக்குழு சென்சாருக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அதன் பின்னரே டீஸர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்திற்கு தள்ளியும் உள்ளது.
அதாவது லியோ படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரசித்து செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தி.மு.க அரசு அனைத்து படங்களுக்குமே அதிகாலை காட்சிகளை நீக்கியது. பொங்கல் பண்டிகையின் போது வெளியான துணிவு, வாரிசு படத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தான் இதற்கு காரணம்.
துணிவு திரைப்படம் அதிகாலை 1 மணிக்கும் வாரிசு 4 மணிக்கும் வெளியானது. இதனைக் கொண்டாட இரு தரப்பு ரசிகர்களும் தியேட்டரின் வாசலில் குவிந்தனர். முதல் காட்சிக்கு பெயர் போன ரோஹிணி சில்வர் ஸ்க்ரீன்ஸ் திரையரங்கில் கொண்டாட்டத்தின் போது கீழே தவறி விழுந்து ஓர் அஜித் ரசிகர் இறந்தார். இந்த துயரத்தை மீண்டும் கண் முன் வராமல் இருக்கவே அதிகாலை காட்சிகள் ரத்து ஆகின.
இற்பினும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் லியோ படத்திற்கு 4 மணி காட்சி வழங்கப்படும் என சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அது மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லியோ படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்கு என உறுதி செய்யப்பட்டுள்ளது.