ஆப்கானிஸ்தானில் ஹிந்து குஷ் மலைப் பகுதியில் மையமாக வைத்து நேற்று இரவு 6.6 ரிட்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உருவானது. இதன் அதிர்வுகள் இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. இந்த நிலையில் லியோ பட குழுவினர் தற்போது காஷ்மீரில் உள்ளதால் அவர்களுடைய நிலை குறித்து சந்தேகம் உருவானது.
தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள பட குழுவினர் நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும் கட்டிடங்கள் எல்லாம் குலுங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எங்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
இதை போன்று லியோ பட குழுவில் பணியாற்றும் பலரும் தங்களுடைய நிலநடுக்க அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் படத்தின் கதை ஆசிரியரில் ஒருவரான ரத்தனக் குமார் நிலநடுக்கத்தை Bloody Earth quake என்று ஆங்கிலத்தில் விமர்சித்துள்ளார்.
மேலும் நிலநடுக்கத்தின் போது அனைவரும் ஹோட்டலுக்கு வெளியே ஓடி வந்து விட்டதாகவும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நிலநடுக்கத்தால் நேற்று சரியாக யாரும் தூங்க கூட முடியவில்லை. இந்த நிலையில் லியோ பட குழு இன்று வழக்கம் போல் தங்களது பணியை தொடங்கி விட்டார்கள். இன்னும் நான்கு நாட்களில் படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்து. அதன் பிறகு ஹைதராபாத்துக்கு செல்கிறார்கள்.
இந்த நிலையில் லியோ பட குழு குறித்து பல மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. விஜய் கத்தியை அடித்ததன் காரணமாகத்தான் நில அதிர்வு ஏற்பட்டதாக பலர் கிண்டல் தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.