தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து பணியாற்றி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பு நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்திருக்கிறது.
ஓடிடி உரிமம் 120 கோடி ரூபாய்க்கு மேலும் சாட்டிலைட் உரிமம் 60 கோடி ரூபாய்க்கும் மேலும் பாடல் உரிமம் 15 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு திரையரங்க உரிமம் 60 கோடி ரூபாய்க்கும் கேரள திரையரங்கு உரிமம் 15 கோடி ரூபாய்க்கும் என தயாரிப்பாளர் காட்டில் பணம் மழை பெய்து வருகிறதாம்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி அனிருத் இசையமைத்துள்ள ஒரு துள்ளலான பாடல் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறதாம் இதில் சுமார் 2000 பேர் பங்கேற்று நடனமாடுகிறார்களாம். இதற்காக சிறப்பு செட் அமைக்கப்பட்டு இரவு பகலாக சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இதுதான் படத்தின் கடைசி பாடல் என்றும் அதன் பிறகு சில காட்சிகளை எடுத்தால் படம் முடிவடைந்து விடும் என்றும் தெரிகிறது. அதன் பிறகு கிராபிக்ஸ் மற்றும் மற்ற பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் படம் குறித்த நேரமான அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங், வாத்தி ரயிடு போன்ற பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலமான நிலையில் அதே போன்ற ஒரு ஹிட்டை கொடுக்க அனிருத் கடுமையாக உழைத்து இருக்கிறாராம்.
மேலும் இந்தப் படத்தில் ஜானி மாஸ்டர் பணிபுரியாதது விஜய் ரசிகர்களை நிம்மதி அடைய செய்திருக்கிறது. வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் அமைத்த தினேஷ் மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.