Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்க்கு 5, அஜித்துக்கு 1 தான்.. சாதனை படைத்த லியோ

விஜய்க்கு 5, அஜித்துக்கு 1 தான்.. சாதனை படைத்த லியோ

- Advertisement -

நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் புது சாதனை ஒன்றை செய்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அனிருத் கூட்டணியில் நடிகர் விஜய் இணைந்து பிரம்மாண்டமான படமாக லியோ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அர்ஜுன் ,சஞ்சய்தத், கௌதம் மேனன் போன்ற பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை காஷ்மீரில் இதன் சூட்டிங் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லியோ படத்தின் டீசர் தற்போது பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

- Advertisement -

அதாவது யூடியூப்பில் 50 மில்லியன் பார்வையாளர்களை லியோ டீசர் கடந்துள்ளது. இதன் மூலம் 50 மில்லியன்களைக் கடந்த ஐந்தாவது விஜயின் டீசர் அல்லது ட்ரைலர் என்ற பெருமையை லியோ பெற்றுள்ளது. இதற்கு முன் மாஸ்டர், பீஸ்ட் ,பிகில், வாரிசு ஆகியவை இந்த சாதனைகளை படைத்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் அஜித்துக்கு துணிவு மட்டும்தான் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இதேபோன்று தமிழ் சினிமாவில் அதிக பார்வையாளர்களை பெற்ற ட்ரெய்லர் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றிருக்கிறது. இதனை 70 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

தற்போது மாஸ்டரின் ரெக்கார்டை லியோ முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜவான் திரைப்படம் ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் லியோ படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என விஜய் ரசிகர்கள் எண்ணினார்கள்.

தற்போது இது தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதில் ஜவான் திரைப்படம் திட்டமிட்டபடியே ஜூன் மாதம் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இதனால் லியோ திரைப்படத்திற்கு எந்த பிரச்சினையும் இருக்காது. தற்போது இந்த செய்தி விஜய் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு அடைய செய்திருக்கிறது.

Most Popular