Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ பாடல் அப்பட்டமான காப்பி.. கடுப்பான உண்மையான இசையமைப்பாளர்.. சிக்கலில் அனிருத்.. !

லியோ பாடல் அப்பட்டமான காப்பி.. கடுப்பான உண்மையான இசையமைப்பாளர்.. சிக்கலில் அனிருத்.. !

பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தப் பின் வெளியான லியோ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் அமர்களப்படுத்தி வருகிறது. நான்கு நாளில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஆஸ்கார் நாயகன் டி காப்ரியோவின் ‘ தி கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் ’ படத்தை தாண்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தன் விருப்பமான மற்றும் உலகின் தலைசிறந்த இயக்குனர்களில் முந்தமையாக விளங்கும் மார்டின் ஸ்கார்சேவை வசூலில் வென்றுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் லியோ படத்திற்கு விமர்சனங்கள் கலவையாகவே வருகிறது. குறிப்பாக இரண்டாம் பாதி மிகவும் மோசம் என்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புதிய சிக்கல் லியோ படத்திற்கு வந்துள்ளது. லியோ படத்தில் மிகவும் புகழப்பட்ட பாடலுக்கு காப்பிரைட் பிரச்சினை வந்துள்ளது.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய்யின் பெயர் வந்தப் பின் உடனே ‘ ஐ எம் என் ஆர்டினெரி பெர்சன் ’ எனும் பாடல் இடம்பெறும். இந்தப் பாடல் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பு பெற்றது. நேற்று இரவு 10 மணிக்கு இந்தப் பாடலை யூடியூபில் வெளியிட்டது படக்குழு.

- Advertisement -

இந்தப் பாடல் உண்மையிலேயே பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ஓட்னிக்கா எனும் இசைக்கலைஞரின் தலைமையில் உருவான ‘ வேர் ஆர் யூ ’ எனும் கரோக்கி பாடலின் காப்பு எனத் தெரியவந்துள்ளது. ஆர்டினெரி பெர்சன் பாடலைக் நாம் கேட்கும் இசை இதில் இருந்து எடுக்கப்பட்டது எனத் தெளிவாகத் தெரியும்.

- Advertisement -

இதனைக் கண்ட பலர் ஓட்னிக்காவின் சேனலில் இது குறித்து கமென்ட் செய்துள்ளனர். தற்போது அதற்கு தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஓட்னிக்கா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ லியோ குறித்து உங்களது நூற்றுக்கணக்கான மெயில், மெசேஜ்க்களுக்கு நன்றி. அனைவருக்கும் என்னால் ரிப்ளை செய்ய இயலவில்லை. மேலும் என் வீடியோவிலும் தொடர்ந்து கமென்ட்கள் நிரம்பிக் கொண்டே உள்ளது. இது குறித்து நாங்கள் விரைவில் ஒரு முடிவு எடுத்து உங்களுக்கு தெரிவிக்கிறோம் ” என்றுள்ளார்.

இந்த இசைக்கலைஞர் கேஸ் கொடுத்தால் நிச்சயம் அனிருத் பதிலளிக்க நேரிடும். முறையாக அனுமதி பெறாததால் அவருக்கு இப்போது பணம் மூலம் நிகர் செய்தவதே ஒரே வழி. இதனை படக்குழு பெரிய கேஸாகா கொண்டு செல்லாமல் விரைவில் தீர்வு பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular