Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ அரசியல் படமா? கமல் போல் விஜய்யும் அரசியல் பேசுவாரா?

லியோ அரசியல் படமா? கமல் போல் விஜய்யும் அரசியல் பேசுவாரா?

தமிழ் திரையுலகில் இடம் தேடாமல் தனக்கென ஒரு பிரபஞ்சத்தையே( எல் சி யு) வை உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
அனைத்து தரப்பு ரசிகர்களாலும் முக்கியமாக இளம் தலைமுறையினரின் நாடி பிடித்தது போல் அவர்கள் விரும்பும் வகையில் திரைப்படங்களை உருவாக்கி அடுத்த திரைப்படத்திற்காக ஏங்கும் நிலைக்கு ரசிகர்களை மாற்றியவர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் 2, லியோ என்று எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக திரைப்படங்களை உருவாக்கி ரசிகர்கள் மற்றும் இன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.தான் பத்து படம் மட்டும் தான் டைரக்ட் செய்வேன் பத்தாவது படம் முடிக்கும் பொழுது திரைப்படத் துறையை விட்டு விலகி விடுவேன் என்றும் கூறி அதிர்ச்சியும் அண்மையில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வர இருக்கிறார். இதனால் லியோ படத்தில் அரசியல் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. குறிப்பாக மாஸ்டர் திரைப்படத்தில் எனக்கு உயிரைக் கொடுக்க வெளியில் கோடி பேர் இருக்காண்டா என வசனம் இருந்தது.

- Advertisement -

இது விஜய் பேசிய அரசியல் வசனமாகத்தான் பார்க்கப்பட்டது. காரணம் இந்த படம் ஷூட்டிங் என்பதுதான் விஜய்க்கு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கு பதிலடி தருமாதான் மாஸ்டரை அந்த வசனம் வைக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இதேபோன்று விக்ரம் திரைப்படத்தில் கமல் ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் தேவையில்லாமல் போதைப் பொருட்கள் குறித்து ஒரு நீண்ட உரையை ஆற்றுவார்.அது இந்த சமுதாயத்தில் போதை பொருட்கள் இருக்கக்கூடாது என்று ஒரு அரசியல்வாதி போல் பேசி இருப்பார்.

பலரும் இந்த வசனம் சம்பந்தமே இல்லாமல் இந்த படத்தில் வருகிறது என யோசித்தார்கள்.அதற்கு காரணம்  கமலின் அரசியல் ஆசைதான்.இந்த நிலையில் லியோ திரைப்படத்திலும் அதே போல் ஏதேனும் காட்சிகள் இருக்குமா? இல்லை விஜய் அரசியல் பேசுவாரா என சந்தேகப்பட்டது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் அரசியல் சம்பந்தமான எந்த செய்தியும் இருக்காது என்று  கூறியுள்ளார்.இப்படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டுமா என கேட்டதற்கு 150 ரூபாய் கொடுத்து தியேட்டரில் வந்து படம் பார்க்க இருக்கும்  ரசிகர்கள் திருப்தி அடைந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

அதேபோன்று லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் அரசியல் மாநாடு போல் நடத்த இருப்பதாக செய்திகள் வெளியானது. இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.ஆனால் இந்த கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அப்படி எந்த ஒரு திட்டமும் இதுவரை இல்லை என்று கூறியிருக்கிறார்.

Most Popular