நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் திரையரங்கு உரிமை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறார்கள். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே லியோ திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் இசை என அனைத்து உரிமைகளும் பெறும் அளவிற்கு விற்கப்பட்டது.
இதன் காரணமாக ஏற்கனவே போட்ட பணத்தை விட அதிக பணத்தை படக்குழுவினர் எடுத்து விட்டார்கள். இந்த தொகை சுமார் 300 கோடி ரூபாய் வரை வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்கு உரிமையை லியோ பட குழுவினர் விற்கும் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே வெளிநாட்டு உரிம தொகையை 60 கோடி ரூபாய்க்கு லியோ தயாரிப்பு நிறுவனம் விற்றதாக செய்திகள் வெளியானது. இதே போன்று கேரளாவில் 20 கோடி ரூபாய் அளவுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் கர்நாடகாவில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் தொடர்ந்து விஜய் படங்கள் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வருகிறது. பிகில், மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் எல்லாம் 20 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதனால் லியோ படமும் பெரும் அளவு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக லியோ திரைப்படத்திற்கு 11 கோடி ரூபாய் அளவுக்கு கன்னட உரிமம் விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் முந்தைய விஜய் படங்களில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படமாக லியோ பெற்றிருக்கிறது. இதேபோன்று தெலுங்கு ஹிந்தி உரிமமும் பெருந்தொகைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தயாரிப்பாளர் லலித் சொந்தமாக படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார். இதனால் தமிழகத்தில் படம் எவ்வளவு ஓடினாலும் அது அனைத்து குழுவினருக்கும் லாபமாக பார்க்கப்படும். வாரிசு படத்தை போல் இந்த திரைப்படத்தையும் சில ஏரியாக்களில் ரெட் ஜெயின்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றமும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் லியோ திரைப்படம் ஒட்டு மொத்தமாக 500 கோடி ரூபாய் வசூலை படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பெரும். இதன் மூலம் தமிழகத்தில் அதிக வசூலை திரையிடுவதற்கு முன்பே பெற்ற படம் என்று பெருமையை லியோ பெறும்.