நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ், விஜய், அனிருத் என இந்த கூட்டணி மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இணைந்திருக்கிறது. லியோ திரைப்படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனையும் படைக்கும் எனவும் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய் சாதனையை படைக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அந்த அளவிற்கு லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த 52 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்றது. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஷூட்டிங்கில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். மார்ச் 25ஆம் தேதி வரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தப்பட லியோ படக்குழு முடிவு எடுத்து இருந்தது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பட குழுவினருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என அறிவிப்பு வெளியான நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காஷ்மீரில் இருந்து லியோ பட குழு சென்னை திரும்புகிறது. இதற்காக ஸ்பைஸ் ஜெட் தனி விமானத்தை பட குழு வாடகைக்கு எடுத்திருக்கிறது.
மதியம் 1:30 மணிக்கு காஷ்மீரில் இருந்து புறப்பட்டு மாலை சென்னை வந்தடைகிறது. இதனால் காஷ்மீருக்கு செல்லும்போது பட குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதேபோல் தற்போது தாயகம் திரும்பும் போதும் படக்குழுவினர் வீடியோவை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பத்து நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் லியோ படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கிறது. படத்தின் டீசர் வெளியான நிலையில் 250 கோடி ரூபாய்க்கு இசை உரிமம், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் ஆகியவை விற்கப்பட்டிருக்கிறது. இதனால் விஜய் படங்களில் அதிக வருமானத்தை கொடுத்த திரைப்படம் என்ற பெருமையை லியோ பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.