அதிரடியான ஆக்க்ஷன் காட்சிகள் மற்றும் விஜய்யை புதிய முகத்தில் காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றார். லியோ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கு குறைவாகவே உள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க ஏற்கனவே இருக்கும் ஆர்வம் வளர்ந்துக் கொண்டே போகிறது.
தற்போது லியோ படத்தின் டிக்கெட் விற்பனைகள் துவங்கி மின்னல் வேகத்தில் புக் ஆகி வருகிறது. தமிழகத்தில் நேற்று கோயம்பத்தூர் மாவதில் கே.ஜி சினிமாஸ் முதலில் ஆன்லைன் விற்பனையை துவங்கினர். இன்று மதுரை, சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் குறிப்பிட்ட சில திரையரங்குகள் ஓப்பன் செய்துவிட்டனர்.
எப்போது இல்லாத அளவிற்கு டிக்கெட் விற்பனைகள் மிகவும் வேகமாக இருக்கிறது. இதுவரை வெளியான அனைத்து திரையரங்குகளும் காலை 9 மணி முதலே காட்சிகளை ஓட்டுகின்றனர். அதிகாலை காட்சிகள் கவுண்டரில் வழங்கப்படும் எனும் நினைப்பில் கிடந்த விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஷாக்.
இன்று மாலை அதிகாரபூர்வமாக தமிழக அரசு லியோ படத்தின் காட்சிகள் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து தியேட்டர்களும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 வரை மட்டுமே படத்தை திரையிட வேண்டும்.
இரு தினகளுக்கு முன்னர் இதே போல காலை 4 மற்றும் 8 காட்சிகளுக்கு அனுமதி எனப் போடப்பட்டிருந்த ஓர் அறிக்கை வைரல் ஆனது. விஜய் ரசிகர்களும் அதனைக் கொண்டாடி தீர்த்தனர். தற்போது அது பொய் என தெரியவந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த வருடம் பொங்கலுக்கு பின் எந்த படத்திற்குமே அதிகாலை காட்சிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. லியோ பெரிய படமென்பதால் கருத்தில் கொள்வர் என சிலர் எண்ணினர் ஆனால் அது நடக்கவில்லை. அதிகாலை காட்சிகள் கொண்டாடத்தைக் கொடுத்தாலும் இறுதியில் எவரேனும் சில விளைவுகளை சந்திக்க நேருடிகிறது. முற்றிலும் அதனை ரத்து செய்வது ஒரு வகையில் நல்லதே.