Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளி வந்தது.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

லியோ திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளி வந்தது.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் அதில் லியோ தான். நம் அண்டை மாநிலங்களில் வெளியாகும் படங்கள் எல்லாம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ள நிலையில் தமிழ் திரைப்படங்கள் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்ட முடியாத நிலையில் இருக்கிறது.

- Advertisement -

நடப்பாண்டில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிகபட்சமாக 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையை செய்தது.இந்த நிலையில் இந்த ரெக்கார்டை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான இசை கோர்ப்பு பணியை அனிருத் மேற்கொண்ட நிலையில் படத்தை அவர் முழுமையாக பார்த்து இருக்கிறார். உடனடியாக சமூக வலைத்தளத்தில் லியோ என பதிவிட்டு 🔥 எமோஜியும்,  கோப்பை எமோஜியும்  பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

இதன் மூலம் படம் தீயாக வந்திருக்கிறது என்பதை அனிருத் பதிவிட்டு இருக்கிறார். அனிருத் நடப்பாண்டில் இதே போல் மேலும் இரண்டு படங்களுக்கு செய்திருக்கிறார். முதலாவதாக ஜெயிலர் படம் பார்த்துவிட்டு அனிருத் இதேபோன்று ஒரு ட்விட் போட்டிருந்தால் அது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

- Advertisement -

இதுபோன்று ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கும் இதே போல் ஒரு பதிவை போட்டிருந்தார். அதுவும் தற்போது ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொட்டது. இந்த நிலையில் மேலே சொன்ன இரண்டு படங்களை விட இதற்கு அதிகமாக சிம்பிள் போட்டு இருக்கிறார்.

இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதேபோன்று இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் ரத்னம் தாம் லியோ படம் எப்படி இருக்கிறது என லோகேஷ் கனகராஜ்யிடம் கேட்டதாகும் அதற்காக இன்னும் அனிருத் படத்தின் இசை கோர்ப்பு பணியை செய்யவில்லை. அதற்கு முன்பே படம் நன்றாக இருக்கிறது என அவர் பதில் அளித்ததாக ரத்தனம் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular