Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்கள்.. லோகி என்ன செய்றீங்க சார்

லியோ படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்கள்.. லோகி என்ன செய்றீங்க சார்

லியோ திரைப்படம் ஷூட்டிங் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விக்ரம் திரைப்படம் சூட்டிங் முடிவடைந்த உடன் சூர்யாவை வைத்து சில காட்சிகளை அப்போது லோகேஷ் கனகராஜ் எடுத்தார். அதேபோல் தற்போது லியோ திரைப்படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் மீண்டும் ஒரு பெரிய நடிகரை வைத்து சில காட்சிகளை எடுக்க லோகேஷ் கனகராஜ் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.

அது சூரியாவா இல்லை வேறு ஒரு நடிகரா என்ற குழப்பம் ஏற்பட்டது ஆனால் அதற்கான ஒரு விடை தற்போது கிடைத்திருக்கிறது.லியோ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை ஒரு கேமியோ ரோலில் செய்ய லோகேஷ் கனகராஜ் அழைத்திருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

அதற்கு அவரும் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்  சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்தது போல் ராம்சரண் லியோ படத்தில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு புறம் இருக்க இந்த கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் அல்லது தனுஷை தான் லோகேஷ் கனகராஜ் நடித்த அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகத்தான் தனுஷ் மொட்டை அடித்து வித்தியாச கெட்டப்பில் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ராம்சரண் நடித்தால் எல்.சி.யு தெலுங்கிலும் வரும். இதற்காகத்தான் லோகேஷ் கனகராஜ் இந்த ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தெலுங்கிலும் லியோ படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை ஈட்டும் என்றும் தயாரிப்பாளர்கள் திட்டம் போட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இதில் ராம்சரண் வந்தால் இது விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு ஒரு கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Most Popular