நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் திரையரங்கில் மாபெரும் வசூலை குவித்து சாதனை படைத்து விட்டது. லியோ திரைப்படத்தை 120 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து நெட் பிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட குறைந்த நாட்களில் அதிக வசூலை குவித்து சாதனை படைத்து விட்டது.
இந்த நிலையில் இன்று கள்ளச் சந்தையில் லியோ திரைப்படம் ஹச் டி பிரிண்ட் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் லியோ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் இல் பார்க்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் netflix-க்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க படத்தை முன்கூட்டியே ஒடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் லலித் குமார் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது.
லியோ திரைப்படத்தை நவம்பர் 20ஆம் தேதி ஓடிடியில் கொண்டுவர முதலில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. தற்போது கள்ளச் சந்தையில் லியோ வெளியாகி இருப்பதால் தீபாவளி முன்னிட்டு வரும் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை லியோ திரைப்படத்தை நெட்பிளிக்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட தயாரிப்பாளர் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளரின் இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். லியோ திரைப்படத்திற்கு இன்னும் கூட்டம் வரும் என்றும் தீபாவளி நேரத்தில் கூட படத்தை 200 திரையரங்குகளில் ஓட்ட திட்டமிட்டு இருப்பதாகவும் இந்த நேரத்தில் லியோ திரைப்படம் நெட்பிளிக்சில் வந்தால் அது எங்களுக்கு வரவேண்டிய லாபத்தை பாதிக்கும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காரணம் லியோ திரைப்படம் மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் தான் திரையரங்குகளுக்கு நிறைய வருமானம் வருவது போல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி நேரத்தில் புதுப்படங்களை விட லியோ திரைப்படத்திற்கு நல்ல கூட்டம் இருக்கும் என்பதால் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்கு நவம்பர் 20ஆம் தேதியே ரிலீஸ் செய்யுங்கள் என திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.