Sunday, May 19, 2024
- Advertisement -
HomeUncategorizedஅடுத்த 4 நாட்களுக்கு வெளியாகும் லியோ போஸ்டர்கள் இதை மையப்படுத்தி தான்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.....

அடுத்த 4 நாட்களுக்கு வெளியாகும் லியோ போஸ்டர்கள் இதை மையப்படுத்தி தான்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.. !

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யுடன் ஓர் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்தப் படத்திற்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. நான்கே படங்களில் தென்னிந்திய சினிமாவில் பெரிய டிமாண்டை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங்கை திட்டமிட்டபடியே ஜூலைக்குள் நிறைவு செய்து அடுத்தக்கட்ட பணிகளுக்கு உடனே நகர்ந்தது படக்குழ். விஜய்யும் வெங்கட் பிரபுவுடனான படத்திற்காக வெளிநாடு சென்று திரும்பினார். படத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் பட்சத்தில் இன்னும் எந்த வித புரொமோஷன் பணிகளையும் ஆரம்பிக்கதாதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்

இந்த ஆண்டு சைமா விருது நிகழ்ச்சியில் விக்ரம் படத்திற்காக விருது வென்ற லோகேஷ் கனகராஜ் அங்கு லியோ படத்தின் அப்டேட் குறித்தும் பேசினார். அவர் சொன்ன படியே நேற்றில் இருந்து அடுத்த நான்கு நாட்களுக்கு போஸ்டர்கள் திருவிழா துவங்கியுள்ளது. தினமும் மாலை 6 மணிக்கு லியோ படத்தின் புத்தம்புதிய போஸ்டர்கள் வெளியாகும்.

- Advertisement -

நேற்று கேஷ்மிர் விஜய்யை மையப்படுத்திய போஸ்டர் வந்தது. மேலும் வெளியானது தெலுங்கு மொழிக்கான போஸ்டர் என அறிவித்திருந்தனர். இன்று கன்னட மொழிக்கான போஸ்டர் மற்றும் அடுத்த அடுத்த நாட்களில் ஹிந்தி, தமிழ் என வெளியாக உள்ளது. நான்கு நாட்களும் வெளியாகும் போஸ்டர்கள் ஒவ்வொன்றும் எவற்றை மையப்படுத்த உள்ளன என்னும் செய்தி லீக் ஆகியுள்ளது.

- Advertisement -

முதல் நாள் கீப் காம் & அவாய்ட் தி பேட்டில், இரண்டாம் நாள் கீப் காம் & பிளாட் யூர் எஸ்கேப் என்ற அடைமொழிகள் வெளியாகியுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் ஒரு நாள் விஜய்யின் குடும்பமும், இரத்தம் தெறிக்கும் போஸ்டரும் வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

Most Popular