Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாநம்ம தலைவருக்கு தில்ல பாத்தியா!!?- எச்சரித்த விஜய்? நிராகரித்த தயாரிப்பாளர்!!

நம்ம தலைவருக்கு தில்ல பாத்தியா!!?- எச்சரித்த விஜய்? நிராகரித்த தயாரிப்பாளர்!!

தளபதி விஜய் கில்லியாக என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் லியோ திரைப்படத்தில், சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மூலம் குந்தவையாக, ரசிகர் மனதில் மீண்டும் சிம்ம சொப்பனம் போட்டு அமர்ந்திருக்கும்  நடிகை திரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி போடு, போடு, என்று மீண்டும்  விஜயுடன் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஜோடி -கில்லி, குரு வி, ஆதி, திருப்பாச்சி, போன்ற படங்களில் இணைந்து நடித்தது ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது.இப்படத்தில் மேலும் சஞ்சய் தத் ,ஆக்சன் கிங் அர்ஜுன், லெஜன்ட் சரவணா ,மிஸ்கின் மன்சூர் அலிகான் ,போன்ற நடிகர்கள் கலக்கி இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது.

இப்படத்தில் காட்சிகள் சில காஷ்மீரில் எடுக்கப்பட்டது. கடும் குளிரில் படக் குழு காட்சிகளை படமாக்கியதை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். “அண்ணன் ரெடி தான் வரவா”? என்று  விஜய் கேட்டு ரசிகர்களை   திக்கு முக்காடா வைத்தார்.

- Advertisement -

சஞ்சய் தத் பிறந்தநாள் பரிசாக  வந்த கிளிம்சும் ரசிகனின் மனதை அள்ளியது..அடுத்து ஆக்சன் கிங் அர்ஜுனனின் பிறந்தநாள் அன்று அடுத்த க்ளிம்ஸ் வர இருப்பதாகவும்  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

- Advertisement -

அடுத்தடுத்து அதிரடிக்கு தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் சில விடுபட்ட காட்சிகளை மீண்டும் காஷ்மீரில் படமாக்கும் முனைப்பில் படக் குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளது. ஆனால் அதில் விஜய் கலந்து கொள்ளவில்லை ஏனென்றால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே சிறப்பாக அமைந்து விட்டதாம்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் எஸ் லலித்குமார், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவின் உரிமையாளர் கூறுகையில் படத்தை அறிவிப்பு செய்யும் பொழுதே இப்படத்தின் வெளியிட்டு தேதியான அக்டோபர் 19ஆம் தேதி சேர்த்து அறிவிப்பு செய்ய வேண்டும் என்று தான் விஜய் இடம் சொன்னதாகவும்; அதற்கு விஜய் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப் போகும் படத்தில் நடிகர் நடிகரும் ஏராளமாக உள்ளார்கள்.

அப்படி இருக்கும் பொழுது சொன்ன தேதியில் உங்களால் படத்தை வெளியிட முடியுமா? முடியாமல் போனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்களே?! என்று கேட்டாராம்!!அதற்கு தயாரிப்பாளரோ, சரியான முறையில் திட்டமிட்டு இருப்பதால், இது சாத்தியம் என்று விஜயிடம் கூறினாராம்.

அவ்ளோ தில் இருந்தா அறிவியுங்கள்! என்று விஜய் சொன்னாராம்…
இப்படத்தில் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதத்தில் பிரம்மாண்டமாக நடக்க  இருப்பதாக கூறினார். மேலும் மலேசியாவில் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ,விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் பரவசப்படுத்தினார்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒருபுறம் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறது பட குழு..!
நீ  வாண்ணா!! வாண்ணா என்று  காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!!!

Most Popular