தற்போது தமிழ் சினிமாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ தான் இசை வெளியீட்டு விழா. பாதுகாப்பு காரணங்களாக நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆடியோ லாஞ்ச் தடை பட்டதற்கு மற்ற நடிகர்களின் ரசிகர்களும் விஜய் ரசிகர்களை ஒட்டி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை தாக்கும் வகையில் பாடல் வரிகள் வைக்கப்பட்டிருந்தது. இது விஜய் ரசிகர்களை கடுப்படைய செய்த நிலையில் தற்போது லியோவின் இரண்டாவது பாடலில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பேர தூக்க நாலு பேரு, இவன் பட்டத்த பறிக்க நூறு பேரு .ஓம் மவனும் பேரனும் ஆட்டம் போட வைத்தவன் போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் நடித்த பேட் ஆஸ் என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. அதில் உரசாம ஓடிடு , வாழ சுருட்டிடு பல ராஜாக்களை பார்த்தாச்சுடா கத்தி ரொம்ப கூராட்சிடா!
பெரும்புள்ளிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் போன்ற பல வரிகள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி ஜெயிலர் படத்தை மற்ற நடிகரின் ரசிகர்களை வம்பு இழுத்து படத்தை ஹிட் ஆக்கினார்களோ தற்போது அதேபோல் இசையமைப்பாளர் அனிருத் விஜய்க்கும் ஒரு பாடலை அமைத்திருக்கிறார்.
பாடலின் இறுதியில் ரெஸ்டின் பீஸ் என அனிருத் கூறுவது மற்ற நடிகர்களின் வசூலை லியோ முறியடித்து விடும் என்பதற்கு பொருள் படும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்
இந்த பாடல் வெளியாகி சில மணி நேரத்திலே பல மில்லியன் வீயூஸை தாண்டி இருக்கிறது.
மேலும் லைக்சும் பிச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு பாடலை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.