Friday, November 22, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ காஷ்மீர் படபிடிப்பு எப்போது முடிவடைகிறது? தள்ளிப் போகுமா ரிலீஸ் தேதி

லியோ காஷ்மீர் படபிடிப்பு எப்போது முடிவடைகிறது? தள்ளிப் போகுமா ரிலீஸ் தேதி

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் அனைவரும் காத்திருக்கும் திரைப்படம் விஜய் நடிக்கும் 67வது திரைப்படமான லியோ. இதற்கு காரணம் விக்ரம் போன்ற மாபெரும் ஹிட் கொடுத்து விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கை கோர்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி நிறைய பிசினஸ் இந்த படம் செய்துள்ளதால் பூஜை விடுமுறையை மையமாக வைத்து அக்டோபர் 19ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பும் டீசர் வீடியோவில் வெளியானது. இதன் மூலம் வியாழன், வெள்ளி ,சனி, ஞாயிறு ,திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் வசூலை அல்ல பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் லியோ படம் எதிர்பார்த்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் படத்தை எடுக்க பட குழு முடிவு எடுத்தது. ஆனால் அங்கு கடும் குளிர் நிலவி வருவதால்  எதிர்பார்த்த படி படபிடிப்பை நடத்த முடியவில்லை.  இதன் காரணமாக இரவு நேரத்தில் இருந்த சூட்டிங்கை பகலுக்கு லோகேஷ் கனகராஜ் மாற்றிவிட்டார்.

- Advertisement -

முதலில் காஷ்மீரில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் படக்குழு சூட்டிங்கை முடித்துவிட்டு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதுவுமே நினைத்த படி நடக்கவில்லை என்பதால் தற்போது மார்ச் 25ஆம் தேதி வரை படப்பிடிப்பை நீட்டிக்க லோகோஷ் கனகராஜ் முடிவு எடுத்துள்ளார்.  இதனை தொடர்ந்து இரண்டு வாரம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் சென்னையில் இறுதி கட்டப்பட பிடிப்பை  நடத்துகிறது. இது மே மாதம் இறுதி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதத்திற்கு எடிட்டிங் ,டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

- Advertisement -

மேலும் படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் அதனை நினைத்த நேரத்தில் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. இத்தனை பணிகள் சரியான நேரத்தில் செய்து விட முடியுமா என்ற கலக்கத்தில் படக்குழு உள்ளது. விஜயின் பிறந்தநாள் முன்னிட்டு ஒரு மாஸ் ஆன போஸ்டர் வெளியிட ப்படும். அதுவரை பெரிய அளவில் லியோ படத்தில் இருந்து அப்டேட் இருக்காது.

Most Popular