Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஅடுத்த 90 நாட்களில் லியோ ஷூட்டிங் முடிவு.. ! இன்னும் 10 நாட்களில் மெகா அப்டேட்...

அடுத்த 90 நாட்களில் லியோ ஷூட்டிங் முடிவு.. ! இன்னும் 10 நாட்களில் மெகா அப்டேட் – ஏன் தெரியுமா.. ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அறிவிப்பு வரும் முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், அதை வார்த்தைகளில் அடக்கிவிட இயலாது. விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

- Advertisement -

மிகப் பெரிய பட்டாளம் கொண்ட இப்படக்குழு வியாபாரத்தில் 1000 கோடியை எட்டும் நோக்கில் இருக்கிறது. தேவையான அனைத்து அப்டேட்களையும் ரசிகர்கள் பெரிதும் ஏங்கிய புரோமோ வீடியோவையும் படக்குழு கொடுத்துவிட்டு தற்போது தீவிரமான ஷூட்டிங்கில் மூழ்கியுள்ளது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு கேஷ்மிரில் பணிகளை தொடர்ந்து வருகிறது. அவ்வபோது இடையிடையே அப்டேட்களும் ரசிகர்களுக்கு வந்தடைகிறது.

ஏற்கனவே அக்டோபர் 19ஆம் தேதி, ஆயுத பூஜை விடுமுறையை லியோ புக் செய்துவிட்டது. 4/5 நாட்கள் விடுமுறை என்பதால் நல்ல லாபத்தை விரைவில் ஈட்டிவிடலாம். அதற்காக தான் விரைந்து விரைந்து பணிபுரிந்து வருகின்றனர். லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் சரியாக இன்னும் 90 நாட்களுக்குள் ஒட்டுமொத்த ஷூட்டிங் வேலைகளையும் முடித்து போஸ்ட் புரொடக்ஷனில் நுழைய திட்டமிட்டுள்ளனராம்.

- Advertisement -

ஜூன் முதல் வாரத்திற்குள் லியோ படத்தின் ஷூட்டிங் முடிவு. அதற்க்கு அடுத்த 20 நாட்களில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு மெகா அப்டேட். பின்னர் 2 மாதங்கள் எடிட்டிங், டப்பிங் என போஸ்ட் புரொடக்ஷன் தீவிரமாக இருக்கும். கடைசி 2 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவிலான புரொமோஷன் எதிர்பார்க்கப்படுகிறது. படம் பேன் இந்தியா படம் என்பதால் விக்ரம் படத்திற்கு கிடைத்த விளம்பரம் இப்படத்திற்கும் கிடைத்ததால் 1000 கோடி நிச்சயம்.

- Advertisement -

அடுத்த அப்டேட் எப்போது ?

சென்ற மாதம் நடிகர்கள் பட்டியல், ஸ்பெஷல் போஸ்டர், பூஜை வீடியோ, புரோமோவென வரிசையாக ரசிகர்களுக்கு விருந்து அளித்தது லியோ படக்குழு. ஷூட்டிங்க்கு இடையே துணை எழுத்தாளர் ரத்னகுமார் குறிப்புகளும் கொடுத்து வருகிறார். மார்ச் மாதம் 14ஆம் தேதி படத்தை தலைமை தாங்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் வருகிறது. அந்நாளில் ஓர் மிகப் பெரிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Most Popular