Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ சிறப்புக் காட்சிக்கு மேல் முறையீடு.. நாளை தீர்ப்பில் நல்லது நடக்குமா.. தமிழக அரசு ரத்து...

லியோ சிறப்புக் காட்சிக்கு மேல் முறையீடு.. நாளை தீர்ப்பில் நல்லது நடக்குமா.. தமிழக அரசு ரத்து செய்ய காரணம் இது தான்.. !

விஜய்யின் கேரியரில் மிகவும் எதிர்பார்ப்பு கொண்ட மற்றும் அதிரடியான ஆக்க்ஷன் காட்சிகள் கொண்ட லியோ திரைப்படம் இன்னும் 3 நாட்களில் தியேட்டருக்கு வரவிருக்கிறது. அதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவுப் பெற்று ரீலீசுக்கு தயாராக இருப்பதை நேற்று புகைப்படங்கள் வெளியீட்டு லோகேஷ் கனகராஜ் & கோ அறிவித்தது.

- Advertisement -

மறுபக்கம் ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதில் மிகவும் அலைச்சல் படுவதைக் காணலாம். எப்போதும் இல்லாத அளவு முதல் நாள் டிமாண்ட் இம்முறை உள்ளது. அதற்க்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். சென்னையில் இன்னும் பல திரையரங்குகளில் ஆன்லைன் விற்பனை துவங்கவில்லை.

இதற்கு ஒரு காரணம் இன்னும் எது முதல் காட்சி எனத் தெளிவாக தெரியாதது தான். கடந்த வெள்ளிக்கிழமை சில திரையரங்குகள் காலை 8 மணி காட்சிகளுக்கு டிக்கெட்டுகளை விற்றனர். ஆனால் தமிழக அரசு காலை 9 மணி முதல் 1.30 வரை மட்டுமே திரையிட வேண்டுமென கட்டயமாக்கியதை அடுத்து திரையரங்குகள் சில காட்சிகளை ரத்து செய்து மீண்டும் ஆன்லைன் விற்பனையை தொடர்ந்தது.

- Advertisement -

இது ஏற்கனவே டிக்கெட் வாங்கிய ரசிகர்களை பாதித்துள்ளது. தற்போது இரண்டு நாட்களே ரீலீசுக்கு இருக்கும் பட்சத்தில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு அணுகியுள்ளனர். நாளை காலை தீர்ப்பு வழங்வுள்ளனர்.

- Advertisement -

19ஆம் தேதி அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சி மற்றும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 7 மணி சிறப்புக் காட்சிகள் என மொத்தம் ஒரு நாளுக்கு 6 காட்சிகள் திரையிட அனுமதிக் கேட்டுள்ளனர். இதற்கு மாறாக தமிழா அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கு அனும்தி அளிக்க மறுப்புத் தெரிவித்து பேசியுள்ளார்.

ரசிகர்கள் பாதுகாப்பபை முதன்மையாக வைத்து இதனை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுள்ளார். நாளை காலை முதல் கேஸாக இதற்கு தீர்ப்பு வந்துவிடும். அதிகாலை 4 மணி காட்சிகள் கடந்த 6 மாதமாக தமிழகத்தில் இல்லை. லியோ படத்திற்கு அதனால் இது கிடைப்பது சற்று கடினம் தான். ரசிகர்கள் பலர் 4 மணி கொண்டாடத்தைப் பெற கேரளா செல்கின்றனர்.

இங்கு திரையரங்குகளில் இது தான் சமயம் என கொள்ளை அடைகின்றனர். 4 மணி காட்சிகள் என்றால் இன்னும் அதிகமாக காசு கேட்பர். அதனால் தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் இல்லாமல் இருப்பதே மேல். மேலும் தயாரிப்பாளர் லலித் இத்தனை நாட்கள் எந்த வித பெரிய புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தாமல் திடீரென கடைசி நிமிடத்தில் அதிக வசூலுக்கு ஆசைப்பட்டு இது போல செய்வது மிகவும் மோசம். பெரிய படத்தை எப்படி டீல் செய்ய வேண்டுமென சுத்தமாக தெரியாமல் ஓர் பெரிய படத்தை தயாரித்துள்ளார்.

Most Popular