Thursday, December 5, 2024
- Advertisement -
Homeசினிமா100 சதவீதம் உறுதி.. லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

100 சதவீதம் உறுதி.. லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

நடிகர் விஜய் நடிக்கும்  லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளிவர உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய திரைப்படமாகும்.
ஜெயிலர் திரைப்படம் தற்போது மிகப்பெரிய வசூலை குவித்து வரும் நிலையில் அதனை லியோ முறியடிக்குமா என எதிர்பார்க்க ப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் கதை குறித்து பல்வேறு யூகங்களும் பதிவுகளும் சமூக வலைதளத்தில் உலா வருகின்றன. இந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுனன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் குறித்து வீடியோ ஒன்றை லியோ பட குழு வெளியிட உள்ளது.

இது மாலை 5 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அவருடைய பெயர் ஹரால்ட் தாஸ் ஆகும். ஏற்கனவே சஞ்சய் தத்தின் பெயர் அர்ஜுன் தாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய சகோதரராகத்தான் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்று அவருடைய பெயரை வைத்தே தெரிய வந்துவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் லியோவின் திரைக்கதை இப்படித்தான் இருக்கும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுனிடம் வேலை பார்த்து வந்து பின்னர் காஷ்மீரில் கடை நடத்தி வரும் நிலையில் அங்கு ஒரு பிரச்சனை ஏற்பட அதனை விஜய் தட்டி கேட்கிறார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாக விஜய்யை கொலை செய்வதற்காக அர்ஜுனும் சஞ்சய் தத்தும் வருகிறார்கள்.

- Advertisement -

இவர்களிடமிருந்து விஜய் எப்படி தன்னை காப்பாற்றிக் கொள்கிறார். அவர்களை எப்படி மீண்டும் கொல்கிறார் என்பதே கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹாலிவுட் வெளியாகி வெற்றியடைந்த ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் தழுவலாக இது இருக்கும் என்று அப்போது இருந்தே ரசிகர்கள் கூறி வரும் நிலையில் தற்போது லியோ தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பும் அதனையே காட்டுகிறது.

Most Popular