Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ எல்.சி.யூவில் வருகிறதா.. ? மெளனம் களைத்துள்ள தயாரிப்பாளர்.. !

லியோ எல்.சி.யூவில் வருகிறதா.. ? மெளனம் களைத்துள்ள தயாரிப்பாளர்.. !

இளைய தளபதி விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இன்னும் படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு வாரங்களே இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆனந்தத்தில் உள்ளனர். அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினரும் வழங்கிக் கொண்டே வருகின்றனர்.

- Advertisement -

போன வாரம் படத்தின் இரண்டாவது பாடலான ‘ பாடாஸ் ’ வெளியாகி வழக்கம் போல் வைரல் ஆனது. நேற்று அதிரடியான டிரெய்லர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. படத்தின் புரொமோஷனுக்கு பலம் சேர்க்கும் ஒன்றில் டிரெய்லர் மிக முக்கிய பங்களிக்கும்.

அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் லோகேஷ் கனகராஜ் & கோ தரமான ட்ரைலரை வழங்கியுள்ளது. இரண்டே முக்கா நிமிட டிரைலரில் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் தான். லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே இது 100% அவரது படம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

- Advertisement -

இத்தனை ஆண்டுகள் பார்க்காத ஓர் விஜய்யை காட்டுவேன் எனும் அவரது வார்த்தைகளை காப்பாற்றியுள்ளார். டிரெய்லர் வந்த கையோடு நேற்று இரவு டிவிட்டர் ஸ்பேசில் கலந்துரையாடலும் நடத்தியது படக்குழு. அங்கு படம் பல்வேறு புதிய செய்திகளை பகிர்ந்தனர்.

- Advertisement -

ரசிகர்களுக்கு இருக்கும் பெரிய குழப்பங்களில் முதன்மையாக இருப்பது என்னவென்றால், லியோ படம் எல்.சி.யூவில் இடம்பெறுகிறதா இல்லையா என்பது தான். இந்தக் கேள்விக்கு நேற்று டிவிட்டரில் பதில் கூறியது படக்குழு. அவர்கள் சொன்னதாவது, “ லியோ படம் எல்.சி.யூவில் உள்ளதா இல்லையா என்பதை நீங்க படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு சர்ப்ரைஸ். ” இதன் மூலம் 70% லியோ எல்.சி.யூ என கன்பார்ம் செய்துள்ளனர் ரசிகர்கள்.

சில மாதங்களுக்கு முன் இதற்காகவே தனிப்பட்ட சந்திப்பு தயாரிப்பாளர்களுக்கு இடையில் நடத்தப்பட்டது. அதனால் லியோ திரைப்படம் எல்.சி.யூ கணக்கில் வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரசிகர்களுக்காக 18ஆம் தேதியே சிறப்புக் காட்சிகளையும் திட்டமிட்டுள்ளனர். இன்னும் 2 வாரங்களில் அதிரடியான திருவிழாவைக் காண காத்திருக்கிறோம்.

Most Popular